பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைப் புலவன்

தமிழ் நாட்டார் தெய்வ பக்தியிற் சிறந்தவர்கள். தெய்வத் திருக்கோயில்களே இந் நாட்டில் அமைத் திருக்கும் அழகோடு வேறு எங்கும் காணல் அரிது. மற்ற எல்லாக் கடவுளரையும் தங்கள் தங்கள் மன இயல்புக்கு ஏற்பப் பூசித்து வந்தாலும், தமிழர்கள் தங்களுடைய காட்டுக்கே தனியுரிமை படைத்த தெய்வ மாக முருகனே வைத்துப் பூசித்தார்கள். முருக வழிபாடு இத் தென்னுட்டில் இருப்பது போல வேறு நாட்டில் இல்லை.

மிகப் பழங்காலத் தொடங்கியே முருகனுடைய கருணைத் திருவிளயாடல்களே கினைந்து பாடிப் போற்றி வந்தவர் தமிழர். தமிழுக்கு உரியதாக ஒரு பெரிய இலக்கணத்தை அருளியவர் அகத்தியமா முனிவர். அவர் தென்னட்டிற்கு வந்த பிறகு தமிழின் விரிவைக் கண்டு அதனேக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உற்ருர், முருகனுடைய திருவருள் பெற்ருல் தமிழ் முழுதும் அறியலாம் என்ற உணர்வு வந்தது. உடனே வடிவேற் பெருமானே உபாசித்துத் தமிழை அவன்பால் அறிந்தார். இதனே,

குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே

என்ற பிள்ளைத் தமிழும், w ..

- சிவன்நிகர் பொதியவரை முனிவனக. மகிழஇரு .

செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே