பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைப் புலவன் 9

என வரும் திருப்புகழும் தெளிவிக்கும். அகத்திய முனி. வருக்குத் தமிழோடு மணி மந்திர ஒளவுத வித்தைகளையும் முருகன் போதித்தான் என்றும் கூறுவதுண்டு. சித்தர் களுள் ஒருவர் அகத்தியர். சித்தர்களெல்லாம் வழிபடும் மாரு இளமை படைத்த சித்தன் முருகன். ஆதலின் அகத் தியர் அப்பெருமானிடத்தில் யாவும் உணர்ந்தார். r

தமிழர்கள் முருகனிடம் கொண்ட பேரன்புக்கு அடை யாளம் அவனேக் குறிஞ்சித் தலைவகை வைத்திருப்பதே. உலக மெல்லாம் முதலில் கடலில் மூழ்கியிருந்ததென்றும், பிறகு நீர் வடிய வடிய முதலில் மலே தோன்றிப் பின் மண் தோன்றியதென்றும் கூறுவர். முதலில் தோன்றிய மலையை யும் அதைச் சார்ந்த இடத்தையும் தமிழர் குறிஞ்சி நிலம் என்று வகுத்துக் கொண்டனர். அந்தக் குறிஞ்சிக்கு உரிய தெய்வம் முருகன் என்பது தமிழர் கொள்கை.

കേചേr് മേധ ഞഥഖങ്ങ? -ു என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

முதல் முதலில் தோன்றிய திணைக்கு உரிய தெய்வ மாக முருகனே வைத்த தமிழருக்கு அப்பெருமான்பால் முதல் தரமான பக்தி இருக்க வேண்டும் அல்லவா?

மலையின்மேல் முருகனே எழுந்தருளச் செய்ததற்கு மற்ருெரு காரணமும் உண்டு. உலகத்தில் கல்வி முதலிய வற்ருல் மிக்கப் பெரியவர்களே உயரிய ஆதனத்தில் இருத்தி வழிபடுவது வழக்கம்: 'உச்சத் தானத்தில் இருப்பவன் பூசித்தற் குரியவன்' என்ற பொருளுடைய வடமொழி வசனமும் உண்டு.

தெய்வத்தையும் உயர்ந்த ஆதனத்தில் வைத்து வழி படுவது இயல்பு. மனிதன் படைத்து அமைக்கும் உயர்ந்த ஆதனங்கள் ஓரளவுக்குள்ளே அடங்கும் உலகத்தில் எது