பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரும் பெயர் முருகன்

உயர்ந்த இடம் என்று பார்த்தனர் தமிழர். கிலப்பரப்பிலே உயர்ந்து நிற்பது மலே தானே? அந்த மலையாகிய உயர்ந்த ஆதனத்தில் உயர்ந்த ஆண்டவனே வைத்து வழிபடுவதே தக்க நெறியென்று கொண்டார்கள். X

தமிழ் நாட்டில் அகத்தியருக்குப் பின் நூற்றுக் கணக் கான புலவர்கள் வாழ்ந்து தமிழ் ஆராய்ந்து நூல் இயற்றி ஞர்கள். தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடித் தமிழாராய்ச்சி செய்த இடத்துக்குச் சங்கம் என்று பெயர். மூன்று சங்கங். கள் ஒன்றன் பின் ஒன்ருகத் தமிழ் நாட்டில் இருந்தன. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று அந்த மூன்றையும் சொல்வார்கள். . தலைச் சங்கத்தில் புலவரோடு புலவராகக் கடவுளரும் இருந்து தமிழாராய்ந்தார்களாம், திரிபுர மெரித்த விரி சடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும், பிறரும் சங்கப் புலவர்களோடு இருந்து தமிழுக்கு வளம் வழங் கினர். அந்தப் புலவர்களுக்குள் தலைமைப் புலவராக இருந்தவர் அகத்தியர். சங்கம் நிறைந்திருந்த பொழுது, அவ்வகத்தியருக்கும் தமிழுரைத்த முருகக் கடவுளே பெருங் தலைவனுக வீற்றிருந்தான். புலவர்களுக்குள் முதற் புலவ கை அவன் இருந்தான். இப்படித் தலைச் சங்கத்தின் தலைப் புலவகை அவன் வீற்றிருந்த பெருமையை நக்கீரர்,

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே என்று கூறி அப் பெருமானப் போற்றுகிரு.ர். குமர குருபர சுவாமிகள் தாம் இயற்றிய முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில், . . . . . . . .

சங்கத் தமிழின் தலைமைப் புலவா தாலோ தாலேலோ