பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைப் புலவன் . - 11

தலைச் சங்கத்தின் பின் இடைச்சங்கம் ஏற்பட்டது. அதிலும் பல புலவர்கள் இருந்தார்கள். பிறகு கடைச் சங்கம் எழுந்தது. அச் சங்கத்தில் இருந்த புலவர்களுள் கபிலர், பரணர், கக்கீரர் என்பவர் தலையாயவர். கபிலர் முருகனுடைய குறிஞ்சித் திணையைப்பற்றியும் அங்கிலத்து ஒழுக்கத்தைப் பற்றியும் சொல்லும் குறிஞ்சிப் பாட்டு’ என்ற நூலே இயற்றியிருக்கிருர். அப்பாட்டு அளவாலும் தகுதியாலும் பெருமையுடையதாதலால் அதற்குப் பெருங் குறிஞ்சி' என்ற பெயரும் உண்டாயிற்று. பரணரும் தாம். பாடிய பாடல்களில் முருகனைப் பற்றிக் கூறியிருக் கிரு.ர். - X- -

நக்கீரர் முருகனைப் பற்றியே தனி நூல் ஒன்று இயற்றி னர். அதுதான் திருமுருகாற்றுப்படை. வேறு எந்தத் தெய்வத்தைப் பற்றியும் அந்த அளவில் ஒரு நூல் சங்கத் தமிழில் இல்லை. - - . . . . . . . . .

அதோடு, திருமுருகாற்றுப்படைக்கு மற்ருெரு சிறப் பும் உண்டு. கடைச் சங்க நூல்களைப் பிற் காலத்தில் புல் வர்கள் தொகுத்தார்கள். அவற்றை மூன்று வரிசையாகப் பிரித்தார்கள். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை,பதினெண் கீழ்க்கணக்கு என்று மூன்று நூல்வரிசைகளாக்கினர். பத் துப்பாட்டு என்ற வரிசையில் பத்து நீண்ட பாடல்கள். உண்டு. எட்டுத்தொகை என்ற மாலையில் பல பாடல்கள் சேர்ந்த எட்டு நூல்கள் உள்ளன. பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகுதியில் பதினெட்டுநூல்கள் இருக் கின்றன. இந்த மூன்றையும் பற்றிப் புலவர்கள் குறிப்பிடும் போது, பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்று சுருக்கமாகக் கூறுவர். இப்படி ஒன்றன்பின் ஒன்ருக கிற்கும் மூன்றிலும் முதலில் நிற்பது பத்துப்பாட்டு என்னும் வரிசை. அதில் முதலாக இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரருக்கு முந்தியவர்.கபிலர். அவர் இயற்றிய குறிஞ்சிப் பு