பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெரும் பெயர் முருகன்

பத்துப்பாட்டில் சேர்ந்ததே. ஆலுைம் நக்கீரர் இயற்றிய நூல் முருகன் பெருமையை விரிவாகச் சொல்வதனல் அதற்கே புலவர்கள் முதல் இடம் கொடுத்தார்கள். திரு முருகாற்றுப்படை இவ்வாறு கடைச்சங்கச் செய்யுள்களுக் குள்ளே முதலில் அமைந்து சிறப்படைந்ததை கினைந்த சிவப்பிரகாசர்,

பாவுள், முன்னுற வந்து நிற்கும் முருகாற்றுப் படைமொ ழிந்தான் என்றுப் பாடுகின்ருர்.

பத்துப்பாட்டுக்கு அடுத்த நூல்மாலை எட்டுத் தொகை. கற்றினே, குறுக்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநா. னுாறு, புறநானூறு என்று எட்டு நூல்கள அடங்கிய தொகை அது. இந்த எட்டு நூல்களிலும் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகையென்று என் ஆசிரியப்பிரானகிய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக் கிருர்கள். அந்தக் குறுக்தொகையில் கடவுள் வாழ்த்தாக அமைந்த முதற் பாட்டு முருகனுடைய தோத்திரம். அதைப் பாடினவர் பெருந்தேவனர் என்ற புலவர் பெருமான். - - நூலில் முதற் பாட்டாக இருப்பது திப்புத் தோளார்' என்ற புலவர் இயற்றிய பாட்டு. கடவுள் வாழ்த்தைப் புறத்தே ஒதுக்கிவிட்டாலும் நூலின் அகவுறுப்பாக முதலில் கிற்கும் அந்தப் பாட்டின் ஆரம்பமே முருகனைப் பற்றிச் சொல்கிறது: "இரத்தத்தால் போர்க் களம் சிவக்கும்படியாக அவுணர்களைச் சங்கரித்த சிவந்த அம்பையும், சிவந்த கொம்பையுடைய யானையையும், சுழலுகின்ற தோள்வளையையும் உடைய முருகனுக்கு உரிய இந்த மலையில் அவனுக்குப் பிரியமான காந்தள்