பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைப் புலவன் 13

மலர் மிகுதியாக உள்னன’ என்ற பொருளுடையது அப்பாட்டு. -

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

இரண்டாவது பாட்டாக வருவது ஆலவாய்ப் பெருமான் தருமிக்குப் பொற்கிழி வாங்கி அளிப்பதற் காகப் பாடிய கொங்குதேர் வாழ்க்கை' என்ற பாட்டு. இறைவர் இயற்றிய அந்தப் பாட்டைக்கூட முதற் பாட்டாக வைக்கவில்லை; இரண்டாவதாகத்தான் வைத்திருக் கிருர்கள். காரணம், முருகன் சம்பந்தமான பாடலை முதலில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் போலும்!

எட்டுத் தொகையில் அமைந்த நூல்களில் பரிபாடல் என்பது ஒன்று. மிகப் பழங்காலத்தில் புலவர்கள் பண்ணுேடு அமைத்துப் பாடிய ஒருவகைப் பாடல் பரிபாடல், பிற்காலத்தில் அந்தப் பாட்டைப் பாடுவார் இல்லை. பரிபாடல் எழுபது சேர்ந்த நூல் அது. ஒவ் வொரு பாட்டுக்கும் இராகமும் தாளமும் உண்டு. பெரும் பாலும் கடவுளர் துதிகளாக அமைந்த நூல் அது: திருமால், முருகன், துர்க்கை என்ற மூன்று தெய்வங் களைப் பற்றிய துதியும், மதுரையையும் வையை யாற்றையும் பாராட்டிய பாடல்களும் உள்ள தொகை.

எழுபது பாடல்களுள் திருமாலுக்கு எட்டுப் பாடல், துர்க்கைக்கு ஒன்று, வையைக்கு இருபத்தாறு: மதுரைக்கு நான்கு, முருகனுக்கு முப்பத்தொன்று. இந்தக் கணக்கிலிருந்து பரிபாடலில் அதிகப் பாடல்களே ஏற்றவன் முருகன் என்பது தெரிய வரும். அதுமட்டும்