பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெரும் பெயர் முருகன்

ஆவினன் குடியாகிய வையாபுரியைத் தலைநகராக உடைய நாட்டுக்கு வையாபுரி நாடு என்று பெயர். கொங்கு நாட்டைச் சேர்ந்த பல சிறு நாடுகளில் வையாபுரி நாடும் ஒன்று; அதனை ஆவினன்குடி நாடு என்றும் சொல்வதுண்டு.

"வல்லமை செறிந்ததிரு வாவினன் குடிநாடு' என்பது கொங்குமண்டல ஊர்த்தொகை என்னும் நூலில் வரும் பகுதி.

சேரர் கொங்குவை காவூர்ந டைதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

என்ற அருணகிரிநாதர் திருவாக்கில் இந்த நாடு வைகாவூர் நாடு என்று குறிப்பிடப் பெற்றிருக்கிறது. கொங்கு மண்டல சதகம், பேகன் இருந்து அரசாண்ட இடம் வையாபுரி என்று சொல்லும்.

கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கம் அருள் செய்ஆண் டகைகரு ணக்குவைப் பாகத்

- திகழ்தரும்அவ் வையாவிக் கோப்பெரும் பேகனெனும்பெருவள்ளல் . : தங்கு வையா புரியெனும் கோநக ருங்கொங்கு --

மண்டலமே.

ஆவினன்குடி முருகனது படை வீடுகளுள் ஒன்று. அந்த ஊரைத் தன் தலைநகராகக் கொண்ட பேகனுக்கு முருகவேளிடத்தில் சிறந்த பக்தி இருப்பது இயல்பே. ஆவியர் குடிக்கெல்லாம் குலதெய்வமாக முருகன் விளங்கின்ை என்று கொள்வதிலும் தவறு இல்லை. பக்தர் களுக்குத் தம்முடைய வழிபடு கடவுளோடு தொடர் புடைய பொருள்களிடத்திலெல்லாம் அதிக அன்பு