பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பழனி 121

சிற்றரசர்கள் பலர் சிறு சிறு நாடுகளே ஆண்டு வந்தனர். வேளிர், குறுநில மன்னர் என்று அவர்களே வழங்குவர். அவர்களுக்குள் பேகன் என்பவன் ஒருவன். தம்பால் வந்தவர்களுக்கு அளவில்லாமல் பொருளே வழங்கும் வள்ளல்களில் ஏழு பேர் மிக்க புகழ் உடையவர்கள். அவர்களேக் கடை யெழு வள்ளல்கள் என்று பிற்காலத் தில் வழங்கினர்கள். அந்த ஏழு பேர்களில் பேகனும் ஒருவன்; மாரிக் காலத்தில் ஒரு மயில் தோகையை விரித்து ஆடும்போது சற்று உடல் சிலிர்க்கவும், அது குளிரால் நடுங்கியதென்று கருதித் தன் மேல் போர்த்திருந்த விலையுயர்ந்த போர்வையை அதன் மேலே போர்த்தின அருளாளன். அவன் மயிலுக்குப் போர்வை அளித்த இந்தச் செய்தியைப் புலவர்கள் பலபடப் பாராட்டியிருக் கிருர்கள்.

இந்தப் பேகனுடைய முழுப் பெயர் வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது. ஆவியர் என்னும் குலத்திலே பிறந்தவன் அவன். அந்த ஆவியர் குலத்தினர் தமக்குத் தலைநகராகக் கொண்ட ஊரே ஆவினன்குடி, ஆவிக்கு நல்ல ஊராக இருப்பது என்பது அதன் பொருள். ஆவிநன்குடி என்பதே ஆவினன்குடி ஆகிவிட்டது. ஆப் என்ற வள்ளல் இருந்த ஊருக்கு ஆய்குடி என்ற பெயர் வந்ததைப் போன்றது. இது. - , | -

. ஆவி வைகும் இடம் ஆதலின் வைகாவியூர் என்ற பெயரும் இதற்கு அமைந்தது. அதுவே நாளடைவில் வைகாவூர் என்றும், வையாவிபுரி என்றும், வையாபுரி என்றும், வையாவி என்றும் மாறி வழங்கியது. வையாவிக்குத் தலைவன் பேகன்; ஆகவே அவனே வையாவிக் கோ எனப் புலவர் கூறினர். ஆவியர் குலத் தில் வந்தவனதலின் ஆவியர் கோமான் என்று பாராட்டினர். - . . ...----. . . .