பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பெரும் பெயர் முருகன்

திருவாகிய லசஷ்மியும் ஆவாகிய காமதேனுவும் இனகிைய சூரியனும் பூசித்தமையால் திருவாவினன் குடி என்ற பெயர் வந்ததாகப் புராணம் கூறுகிறது.

பழனிக்குச் சித்தன் வாழ்வு என்ற பெயர் உண்டென்று, திருமுருகாற்றுப் படைக்கு நச்சினர்க்கினியர் எழுதிய உரையில்ை தெரியவருகிறது. சித்தன் என்பது முருகக் கடவுளுடைய பெயர்களுள் ஒன்று. 'சித்தன் வாழ்வு, இல்லந் தொறுமூன் றெரியுடைத்து’ என்று, ஒளவையார் பாடிய பாட்டொன்றில் வருகிறது. அதல்ை அங்கே அந்தணர் அதிகமாக முற்காலத்தில் இருந்தனரென்று தெரிய வருகின்றது. இவை பிற்காலத்தில் புராண வாயிலாகவும் பிறவாறும் வழங்கிவரும் செய்திகள்.

தமிழில் உள்ள பழைய நூல்களால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் முருகனுடைய வழிபாடு மிகச் சிறப்பான கிலேயில் தமிழ் நாட்டில் கிகழ்ந்து வந்தது என்று தெரிந்து கொள்ளலாம். நக்கீரர் தாம் பாடிய திருமுருகாற்றுப் படையில், முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களேயெல்லாம் எடுத்துச் சொல்கிரு.ர். அவர் கூறிய தலங்களே ஆறு படை வீடுகள் என்று பிற்காலத்தில் வரையறையாக வழங்கலாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோருடல், பழமுதிர்சோலை மலை என்ற வரிசையில் அந்த ஆறு படை வீடுகளையும் பெயரிட்டு வழங்குவர். இவற்றில் முன்ருவதாக வருவது ஆவினன் குடி.

9 - அக்காலத்தில் சேரசோழ பாண்டியர்கள் செங் - கோல் செலுத்தி வந்தனர். அவர்களே அன் றி அங்கங்கே