பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பழனி

கலியுக வரதனகிய முருகவேள் இன்றும் அடியார் களிடத்தில் தன் அதிசய அற்புதத் திருவருளேக் காட்டி ஆட்கொள்ளும் கிகழ்ச்சிகள் பல உண்டு. அப்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களில் பல அற்புத நிகழ்ச்சிகளைக் காணலாம். பழனித் தலத்தில் அடிக்கடி இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. 'அதிசயம் அநேகம் உற்ற பழகி மலே மீதில் கிற்கும் அழக’’ என்பது அருண கிரிநாதர் வாக்கு.

பழனியில் மலைமேல் தண்டாயுதபாணியின் திருக் கோயிலும், அடிவாரத்தில் தேவியருடன் உள்ள குமரன் ஆலயமும் இருக்கின்றன. மலேயைப் பழனியென்றும், அடியிலுள்ள திருக்கோயிலை ஆவினன் குடியென்றும் வழங்குகின்றனர். இத் தலத்தில் வையாபுரி என்ற பெரியதீர்த்தம் ஒன்று இருக்கிறது.

பழனியென்பது பழம் நீ என்பதன் திரியென்று பழனித்தல புராணம் கூறுகிறது. நாரதர் கொடுத்த பழத்தைத் தனக்குச் சிவபெருமான் வழங்காமையால் சினங்கொண்ட செவ்வேள் இம்மலையில் வந்து கின்ருன்; சிவபிரானும் தேவியும் இங்கே எழுந்தருளி, பழம் நீ ஆக இருக்கையில் உனக்கு வேறு பழம் எதற்கு?’ என்று. கூறி அன்பு பாராட்டினர்; அவர்கள் கூறிய, "பழம நீ” என்ற தொடரே இதற்குப் பெயராகிப் பின்பு அது குறுகிப் பழகி என்று ஆயிற்று. இது பழனித்தல புராணக் கதை.