பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெரும் பெயர் முருகன்

3

பழனி என்பது மலையின் பெயர். அதன் பழம் பெயர் பொதினி. பொதினியே மாறிப் பழனி என்று ஆகி யிருக்கலாம். முடிமன்னர்களையும், குறுகில மன்னர் களேயும் புலவர்கள் பாராட்டிப் பாடும்போது அவர்களுக் குரிய சிறப்பையும், அவர் நாட்டுக்குள்ள சிறப்பையும் சொல்வார்கள். ஊர், மலே, ஆறு என்னும் இவற் றைச் சார்த்தியும் பாராட்டியும் புகழ்பாடுவார்கள். அப்படிப் பாடும் வகையில் ஆவியர்குடிக்கு உரியது பொதினி என்னும் மலே என்று தெரியவருகிறது.

நெடுவேள் ஆவி அறுகோட் டியானைப் பொதினி, முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி என்று மாமூலனர் என்னும் புலவர் பொதினியை ஆவிக்குரிய மலையாகப் பாராட்டுகிருர். வேறு சில இடங்களில் பேகனைப் பெருங்கல் நாடன் பேகன்' என்று புலவர்கள் குறித்துச் செல்கின்றனர். பெரிய மலையையுடைய நாட்டுக்குத் தலைவன் பேகன்' என்பது அதன் பொருள். பெருங்கல் என்பது பொதினி மலையைக் குறிப்ப தென்றே கொள்ளலாம்.

ஆவினன்குடியாகிய ஊரும், பொதினியாகிய மலையும் பேகனுக்கும் அவன் குலத்தினருக்கும் உரியன. பேகனை, முருகன்னப்போலப் போர்புரியும் திறலுடையவன் என்று. பாராட்டுகிருர் ஒரு புலவர். | r

ஆவினன்குடியில் முருகன் திருக்கோயில் பழங்கால முதலே இருக்கிறதென்பதற்குத் திருமுருகாற்றுப்படை முதலிய நூல்கள் சான்று பகர்கின்றன. ஆனல் பொதினி யாகிய பழனிமலையில் முருகனுக்கு ஆலயம் இருந்ததா?