பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பழனி 125

அதைப்பற்றிய குறிப்பு ஏதாவது பழைய நூல்களில் உண்டா?-இத்தகைய கேள்விகளுக்கு விடையளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சில ஆராய்ச்சிக்காரர்கள் பழனிமலைக் கோயில் பிற்காலத்த தென்றும், திருவா வினன் குடியே பழங்காலத்தில் இருந்ததென்றும் சொல்வ துண்டு. ஆவினன் குடியைப்போலவே பொதினியாகிய பெருங்கல்லிலும் முருகன் இருந்து மக்களேப் பாதுகாத். தான் என்பதற்குரிய குறிப்புக்கள் சங்க காலத்து நூல் களில் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.

பெருஞ்சித்திரனர் என்ற புலவர் தாம் பாடிய செய்யுள் ஒன்றில் பாரி முதலிய ஏழு வள்ளல்களைப் பற்றிச் சொல்கிருர். சிறப்புடைய மலையை யார் பெற்றிருக்கிருர் களோ, அவர்களேப்பற்றிச் சொல்லுகையில் அந்த மலேயையும் சொல்கிருர், பாரியின் பறம்பு மலையையும், ஒரியின் கொல்லிமலையையும், எழினியின் குதிரை மலையையும் சொல்லியிருக்கிருர் பேகனைப்பற்றிச் சொல் லும்போதும் பெரிய மலையையுடைய நாடன் என்கிருர்; மலையின் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் அந்த மலையைப்பற்றிச் சில செய்திகள் சொல்கிருர். . . . .

சர்ந்தண் சிலம்பின் இருள்துங்கும் நளிமுழை அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன் பேகனும் -

என்று பேகனைப்பற்றிச் சொல்கிருர். மிகக் குளிர்ந்த மலைப்பக்கத்தில் இருள் செறிந்த பெரிய குகைகளையுடைய, தும், பிறரால் வெல்லுவதற் கரிய திறலையுடைய தெய்வம் காக்கும் உயர்ந்த உச்சியையுடையதும் ஆகிய பெரிய மலைக்கு உரிய நாடகிைய பேகனும்' என்பது: இதன் பொருள்.