பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெரும் பெயர் முருகன்

ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி

என்ற அகநானூற்றுப் பாட்டில் (61) ஆவிக்குரிய பொதினியில் பொன்னுடைய உயர்ந்த கோயில்: இருந்ததை மாமூலர் சொல்கிருர். நெடுநகர் என்பது உயர்ந்த கோயில் என்ற பொருளே உடையது.

முக்கட் செல்வர் நகர் (புறநானூறு)

பூமுடி நாகர் நகர் (பரிபாடல்) என்று கோயிலை நகர் என்ற சொல்லாலே பழங்காலத்துப் புலவர்கள் குறித்தார்கள். ஆவியினது பொதினி, பொன்னுடை நெடு நகரையுடைய பொதினி என்று கூட்டி அர்த்தம் செய்யவேண்டும். பொன் என்பது தங்கத்தையே குறிக்கவேண்டும் என்பது இல்லை. எல்லா வகை உலோகங்களேயும் பொன் என்று குறிப்பது தமிழ் மரபு.

இங்கே, பொதினியில் ஒரு கோயில் இருந்ததென்பது

குறிக்கப் படுகிறது. அந்தக் கோயில் முருகவேளுடைய கோயிலே என்று முன்னே சொன்ன செய்திகளைக் கொண்டு முடிவு கட்டலாம்.

ஆகவே, பழனியாண்டவனும் பழம் புலவர்களாற். பாராட்டப் பெற்றவனென்பதும், அற்புத நிகழ்ச்சிகளே அருளால் நடக்கச் செய்கிறவன் என்பதும், அவனுக்கு ஒரு கோயில் பொதினியின் உச்சியில் இன்று போலவே, அன்றும் இருந்தது என்பதும், ஆவியர் குடிக்கெல்லாம். குலதெய்வமாக ஆண்டவன் விளங்கிெைனன்பதும், கடையெழுவள்ளல்களில் ஒருவகிைய பேகன் முருகன் அடியானென்பதும் பழைய நூல்களில் உள்ள குறிப்புக் களால் தெரிந்து கொள்ளலாம். . . „ . ،