பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பவல் 133

வார்த்தை அது. கையிலே சேமித்து வைத்திருப்பதாகிய அவல் என்று அத் தொடருக்குப் பொருள் கொள்ளலாம்.

உணவு வகைகளில், சமைத்த ஆகாரங்களே ஒரு நாளுக்குமேல் வைத்துக் கொள்வது நம்முடைய வழக்கம் அன்று. ஆனல் யாத்திரை செய்கிறவர்கள் தம்முடைய பசியைப் போக்கிக்கொள்ளப் பொரிமாவையும் அவலேயும் கொண்டு போவார்கள். யாத்திரை போகிறவர்களுக்கு இன்றியமையாத பொருள்களில் அவலும் ஒன்று. பெருங் கதை என்ற பழைய தமிழ் நூலில் அவலே, ஆத்திரைத் தருப்பணம்’ என்று ஆசிரியர் சொல்கிருர். ஆத்திரை என்பது யாத்திரையைக் குறிப்பது. தருப்பணம் என்பது அவலுக்குப் பெயர். யாத்திரை செய்பவர்கள் சமயத்தில் தம் பசியைத் தீர்த்துக் கொள்ளத் துணியில் அவலே முடிந்து வைத்துக் கொள்வார்கள். பல நாள் வழி நடந்து சென்று துவாரகையை அடைந்து கண்ண பிரானேக்கண்டு களிப்பதற்குப் பலநாளும் கெடாமல் இருக்கும் அவலே பல்லவா குசேலர் எடுத்துச் சென்ருர்?

அவல் மிகவும் சுலபமான உணவு. தனியே உண்ண லாம். நீரிலே ஊறவைத்து உண்ணலாம். மோரிலிட்டு ஊறவைத்தோ, வெல்லம் போட்டோ உண்ணலாம். மீட்டும் பக்குவம் செய்து புளியவல், வெல்ல அவல் முதலிய உருவத்தில் உண்ணலாம். ஏழை முதல் பணக் காரர் வரையில் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். செல்வர் விட்டு விருந்தில் அவல் பாயசம் சிறப்புத் தருவதைச் சுவை கண்டவர்கள் அறி வார்கள். - . . . . . . . . . . .

திருப்புகழ் சேமித்து வைத்த அவலேப் போன்றது; கையிருப்பிலே உள்ள அவலேப் போன்றது. மடி, ஆசாரம் முதலிய நியமங்களோடு ஒதும் மந்திரங்களைப் போலன்றி எந்தச் சமயத்திலும் யாரும் ஓதலாம். காலன் சர்க்குச்