பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பெரும் பெயர் முருகன்

என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டார்கள். இன்னும் பலர், "இருப்பவல் திருப்புகழ்' என்ற தொடர் திருப்புகழ் அன்பு இல்லாதவர்களுக்கு அது இரும்பு அவலேப் போலக் கடினமாக இருப்பது என்று பொருள் செய்கிருர்கள். - -

'இருப்பவலேப் போன்ற திருப்புகழை யார் விருப்பத் தோடு படிக்கிருர்களோ அவர்களுடைய துன்பங்களே அது அறுத்து விடும்” என்ற பொருள் பட, "இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்’ என்று அருணகிரிநாதர் பாடியிருக்கிரு.ர். 'விருப்பொடு படிப்பவர்' என்பதைக் கவனிக்க வேண்டும். இரும்பு அவல்போல இருந்தால் அதை விரும்பிப் படிப்பவர் யார் இருப்பார்கள்? பிற இடங்களில் திருப்புகழைப் பாராட்டிய முறைக்கும், இங்குள்ள முறைக்கும் மாறுபாடு இருப்பதாகக் கொள்வது பொருந்துமா? மதுரங்கனிந்த பாமாலை என்று பிற புலவர்கள் பாடியிருக்கிருர்கள். அதற்கும் மாருகத் திருப்புகழை இரும்பு அவல் என்று சொல்லலாமா?

இவற்றையெல்லாம் யோசிக்கும் பொழுது, இருப்ப வல் என்ற தொடரே அங்கே இருப்பது தவறு என்று தோற்றுகிறது. தொடர் தவறு என்று கொள்வதைவிட அதற்கு நாம் கொள்ளும் பொருள் தவறு என்று சொல்வது தான் கியாயமானது. அப்படியானல் திருப்புகழின் சிறப் புக்கு ஏற்ற வகையில் எப்படி அர்த்தம் பண்ணுவது?

இருப்பவல் என்றதொடரை இரும்பு-அவல் என்ற இரண்டு சொற்களாகப் பிரிப்பதனுல்தான் இந்தச் சங்க டம் வருகிறது. அதை விட்டு விட்டு, இருப்பு- அவல் என்று பிரித்துப் பார்க்கலாம். இருப்பு என்பது கையிலே இருப்பது; சேமித்து வைத்த பொருளுக்குச் சொல்லும்