பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பவல் 13.1

இசையோடு நல்ல முறையில் திருப்புகழ்ப் பாக்களைப் பாடித் தமிழ் மக்களின் உள்ளத்தில் இருந்த இந்தப் பயத்தைப் போக்கிவிட்டார்கள். .

"சுக்குமொ-ளகுதிப்-பிலி” என்று பிரித்துக் கொலைபண்ணுபவர்கள் எந்தப் பாட்டைப் பாடிலுைம் பொருள் விளங்காதபடியே பாடுவார்கள். திருப்புகழைப் பாடி வந்த பழைய கால பக்தர்கள் தம்மை அறியாமலே அதன் சந்தத்தைப் பெரிதாக்கிக் காட்டினர்கள். இதல்ை தமிழ் மக்களில் பலர் திருப்புகழ் இரும்புக்கடலை என்று கினைத்ததில் தவறு இல்லே. சந்தப் பாக்களாகிய திருப் புகழை இயற்றுவது அருமையே அன்றி, படித்துப் பொருள் அறிவது எளிது. எல்லாத் திருப்புகழும் எளிதிலே பொருள் அறியும் வண்ணம் இருக்கின்றன என்று நான் சொல்ல வரவில்லை. கம்பராமாயணத்திலே கூடப் பொருள் விளங்காத பாடல்கள் பல உண்டு. இன்னும் புலவர்கள் பொருள் வரையறை செய்வதில் ஒருமுகப்படாத பாடல்கள் உண்டு. அவற்றைக் கம்ப சூத்திரம் என்று சொல்வார்கள். எல்லா நூல்களிலும் இத்தகைய கவிகள் இருப்பது இயற்கை. ஆகவே திருப் புகழிலும் பொருள் எளிதில் விளங்காத சில பாடல்கள் இருப்பது ஆச்சரியம் அன்று. அதைக்கொண்டு திருப்புகழ் முழுவதும் கடினம் என்று சொல்வதுதான் பொருந்தாது.

எப்படியோ, திருப்புகழ் கடினமானது என்று முன்பு ஒரு கருத்துப் பரவி யிருந்தது. அதோடு திருப்புகழில், "இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கின அறுத்திடும்” என்ற பகுதி ஒன்று வருகிறது. அதைச் சிலர் எடுத்துக் காட்டி, "அருணகிரி நாத சுவாமி. களே திருப்புகழ் இரும்பினுல் பண்ணின. அவலேப் போன்றது என்று ஒப்புக் கொள்கிருரே. நாங்கள், இருப்புக்கடலை என்று சொல்கிருேம். எங்கள் கருத்தில்,