பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரும் பெயர் முருகன்

திருப்புகழின் இனிமையையும் உயர்வையும் வேறு பல புலவர்கள் பாராட்டியிருக்கிரு.ர்கள். -

அருணகிரி சொரிகவிதை யமுதம் என்று அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடுகிரு.ர்.

உதிருங் கனியை நறும்பாகில்

உடைத்துக் கலந்து தேனைவடித்து ஊற்றி அமுதி னுடன் கூட்டி

ஒக்கக் குழைத்த ருசிபிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப்பா மாலை என்று திருமலைப் பிள்ளைத் தமிழ் ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பாராட்டுகிரு.ர். திருப்புகழில் இனிமையும் தெளிவும் இருப்பது இதல்ை விளங்கும்.

சந்தப் பாடல்களாக இருப்பதால் தாளத்தோடு பாட ஏற்புடையவை திருப்புகழ்ப் பாடல்கள். இருபது முப்பது ஆண்டுகளாகவே திருப்புகழ் தமிழ் நாடெங்கும் ஓங்கிப் பரவி வருகின்றது. இசை நயமும் இலக்கியச் சுவையும் வெளிப்படப் பாடுவாரும் பொருளுரைப்பாருமாகப் பலர் இப்போது இருக்கின்றனர். -

திருப்புகழை ஒரே மாதிரி இசையோடு கட கட கட வென்று முன் காலத்தில் சிலர் சொல்வதுண்டு. மலேயருவி விழுவது போலவும் ரெயில் வண்டி ஒடுவது போலவும் அவர்கள் பாடுவார்கள். பாட்டின் சொற்கள் தெளிவாகக் காதில் விழாவண்ணம் பாடுவார்கள்.அவர்கள் பாடுவதைக் கேட்டால், "திருப்புகழ் மிகவும் கடினமானது போலும்!” என்று தோன்றும். பலர் அப்படியே நினைத்த காலம் உண்டு. நல்ல வேளையாக மதுரை நீ சாமி ஐயர், பூ வள்ளிமலை சுவாமிகள், பரீ திருப்புகழ் மணி ஐயரவர் கள், பூரீ கிருபானந்த வாரியாரவர்கள் முதலியோர்