பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பவல் 135

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணம் எனக்கொள் ஒரு

விக்கின சமர்த்தன் என்றும் பாடும்போது அவலே மறக்கவில்லை. அது அவர் கினேவில் இருக்கும் பொருள். ஆகவே அந்த அருமை யான, ஆனல் எளிதிலே உண்பதற்குரிய பொருளைத் திருப்புகழுக்கு உவமை ஆக்கினர்.

இதில் அவருடைய விநயமும் புலப்படுகிறது. 'நான் அமுதம் தரவில்லை; கனி தரவில்லை. வெறும் அவல் தரு கிறேன்; இருப்பிலே வைத்திருக்கும் அவல் தருகிறேன். ஏழைகள் ஆண்டவனுக்குத் தருவது அதுதான் என்று குசேலர் காட்டியிருக்கிருர் அல்லவா? ஆகவே நானும் அவல் தருகிறேன்” என்று சொல்வது போல இருக்கிறது . அந்த உபமானம். குசேலர் கண்ணனுக்கு ஒருவகை அவல் கொடுத்தார். அருணகிரி நாதர் கந்தனுக்கு ஒரு வகை அவல் கொடுத்தார். குசேலர் அளித்தது கெல் அவல். அருணகிரி நாதர் கொடுத்தது சொல் அவல்.