பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை விலங்கு

தாமரைப் பூவாகிய அழகிய பீடத்தில் சதுர்முகப் பிரமன் வீற்றிருக்கிருன். காலையில் செய்ய வேண்டிய ஒளபாசனத்தையும் வேதபாராயணத்தையும் செய்தாகி விட்டது. கலைமகள் அருகிருந்து தான் செய்யவேண்டிய உதவிகளைச் செய்ய, நெறி முறை வழுவாமல் செய்ய வேண்டிய வைதிக காரியங்களைக் குறைவின்றி கிறை வேற்றிய பிரமதேவனுக்குச் சிறிது பசித்தது போலும்! தன்னுடைய கணக்குச் சுருணேயை எடுத்துவரச் சொல் லிப் பார்க்க உட்கார்கிருன்:

எத்தனையோ காலம் ஆயிற்று, இந்த நான்முகன் பதவி பெற்று. தினமும் பொழுது விடிந்தால் ஆன்மாக்களே உடம்பென்னும் சிறையில் போட்டு, அவரவர்கள் தலையில் எழுதும் உத்தியோகத்தைச் செய்து வருகிருன். ஒரு முகத்தைப் போல ஒரு முகம் இருப்பதில்லே. ஒருவன் வாழ்க்கையைப் போல மற்ருெருவன் வாழ்க்கை இருப்ப தில்லே. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவன் செய்துவரும் சிருஷ்டிகள் அத்தனையும் ஒன்றுபோல் ஒன்று இல்லை. எல்லாம் வெவ் வேறு வகை; வெவ்வேறு உருவம். பேதம் இல்லாத சிருஷ்டியே இல்லை. பேதமயம் ஜகத்தாக கிற்கும் படி படைப்புத் தொழிலிலே ஈடுபட்டுக் கிடக்கிருன் பிரமதேவன். w

கணக்குச் சுருனேயை எடுத்துப் புரட்டிப் பார்க் கிருன். அன்று புதுக் கணக்குப் போடும் சந்தர்ப்பம். எந்த எந்த உயிரை எப்படி எப்படிப் பிறக்கக் செய்கிறது