பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரும் பெயர் முருகன்

கிருன். வீட்டுக்குப் போகவேண்டிய அவசரத்தில் வேலை பார்க்கும் குமாஸ்தாவைப் போல, அவன் வெகு வேக மாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கிருன்.

அன்று அவன் பட்டோலையில் புதிய பிறவி கொடுத்துப் பதிந்த ஜீவர்களுள் ஒரு ஜீவன் பூவுலகத்தில் உள்ள ஒருவன். அவன் பல பாவங்களைப் பண்ணினவன் என்று சொல்வதற்கில்லை; புண்ணியங்களேயும் செய்திருக் கிருன். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் முருகனை நம்பி வாழ்ந்திருக்கிருன்; முருகன் அடியார் கூட்டத்தில் ஒருவ கை இருந்து வாழ்நாளைப் போக்கியிருக்கிருன்.

நான்முகன் அவசரத்தில் அவனுக்கும் மறு பிறவி ஒன்றைக் கொடுத்து விட்டான். தவறு; பெரிய தவறு. முருகனுடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லை. அவர் களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்துத் தீர் மானம் செய்யும் அதிகாரம்,தன் வாழ்நாள் ஆனதும் வேறு. பிரமாவுக்கு இடங் கொடுத்து மாண்டுபோகும் இந்த நான்முகனுக்கு இல்லை. பட்டோலேயில் முருகன் அடியார் பெயரே காணக்கூடாது. அவன் அவர்கள் பெயரைப் பயபக்தியோடு உச்சரித்து உருகலாமே ஒழிய, அவர் களேத் தன்னுடைய தராசிலே வைத்து கிறுப்பதாவது! ஏதோ போதாத வேளை, நிறுத்து எடை போட்டு முடிவு கட்டி அடுத்த பிறவி இன்னதென்றுகூட எழுதி விட்டான். -

எல்லாம் அறியும் சர்வஞ்ஞனை முருகவேளுக்கு இந்தச் செய்தி தெரிந்து விடுகிறது. அடியார்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் அதை முன் கூட்டியே அறிந்து விலக்கும் பேரருளாளன் அல்லவா அவன்? பிரமதேவன் செய்த பேதைமைச் செயலே கினைத்துப் புன்முறுவல் பூக்