பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை விலங்கு 139

கிருன். 'முட்டாள்; முன்னலே நம்மை அவமதித்துப் பட்ட தண்டனை மறந்து விட்டது போலும்! இப்போது நம்முடைய அடியான அலட்சியம் செய்து மற்ற ஜீவர் களோடு சேர்த்துவிட்டான். நமக்குப் பண்ணும் அபரா தத்தை நாம் பொறுத்தாலும் பொறுப்போம். நம் அடியா ருக்குச் செய்வதைக் கணநேரமும் பொறுக்க மாட்டோம். ஆரங்கே?' என்று அழைத்தான் கருணைவாரிதி. லட்ச வீரர்களுள் ஒருவன் கைகட்டி வாய்புதைத்து வந்து முன்னே நின்ருன். அந்த நான்முகனே இங்கே இழுத்து வா. நம்முடைய அடியான் ஒருவனேப் பிறப்பெடுக்கும் கூட்டத்தாரிலே சேர்த்துப் பட்டோலேயில் எழுதியிருக். கிருன் . என்ன துணிச்சல்! போ; சீக்கிரம் போய் இழுத்து வா. பக்தனுக்கு அபசாரம் செய்தவனேக் கணநேரம் கூடத் தண்டனே கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது' என்று கண்ணிலே சிவப்பூர உத்தரவிட்டான் எம்பெருமான். - - - -

வீரன் ஒடினன், சத்திய லோகத்துக்குப் போய்ப் பிரமதேவன் இல்லத்தை அடைந்தான். பிரமதேவன் கணக்குச் சுருனேயை வைத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தான். வீரன் அவன் முன்னே போய்ப் படபடப் போடு கின்றன். தலை கிமிர்ந்து பார்த்த கமலாசன னுக்குத் துாக்கிவாரிப் போட்டது. கனல் கொப்புளிக்கும் கண்ணுேடு கிற்கும் வீரனைக் கண்டு, 'என்ன விசேஷம்?" என்று விநயத்தோடு கேட்டான். - : ,

எழுந்திரையா, எழுந்திரு. உன்னுடைய கணக்குச் - சுருணயை அதோ அந்த ஒம குண்டத்தில் போட்டுப் பொசுக்கு. வா, என்னுடன்.” * . .

என்ன செய்தி? எங்கே வரவேண்டும்?' என்று. நடுங்கிக்கொண்டே கேட்டான் நான்முகன். -