பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பெரும் பெயர் முருகன்

அங்கேதான்; அன்றைக்கு உன் காலில் விலங்கு போட்டுத் தலையில் குட்டுக் குட்டிச் சிறையில் அடைத் தாரே, அவரிடம். அதெல்லாம் இப்போது மறந்து விட்டது போலும்!”

மறையோன் தத்தளித்தான். இன்னும் அவனுக்கு விஷயம் விளங்கவில்லை. எதற்காக இவ்வளவு பட படப்பு?' என்று மெல்லக் கேட்டான்.

“புறப்படையா! எங்கள் பெருமானே அவமதித்துப் பட்ட சுகம் உனக்குத் தெரிந்ததுதானே? அடியார்களேப் பாதுகாக்கும் வேலையைத் தொண்டாகப் பூண்ட பெருமான் குமாரக் கடவுள் என்பதை நீ அறிய வில்லையோ? அவர் கையில் உள்ள வேல் சாமானிய மானதா? அது தனிச் சிறப்புள்ள வேல். பொங்கிய கடல் வாய்விட்டு அலறச்செய்த வேல். பளபளத்து வந்த கிரவுஞ்சகிரியைப் படுகுரணமாக்கிய வேல். அந்த வேலைக் கையிலே பிடித்த எம் கோனுக்கு உன்னுடைய காரியம் தெரிந்துவிட்டது. நீ எப்படி முருகனடியார் பெயரைப் பட்டோலேயில் இடலாம்?"

சுருணையைக் கட்டி வைத்துவிட்டுக் கவலை முகத்தில் தேங்கப் பிரமதேவன் புறப்பட்டு விட்டான்: ஐயோ! வேகத்தில் நான் எந்த மகானுபாவனையோ பிறக்கிறவர் கள் வரிசையிலே சேர்த்துவிட்டேன் போலிருக்கிறது’ என்று நினைக்கிருன். யோசித்துப் பார்க்கிருன். உடம் பெல்லாம் வேர்க்கிறது. கால் தன் பாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. - - .

இருவரும் முருகன் சந்நிதியை அடைந்தார்கள். ஏ பிரமதேவா! நம்முடைய அடியார்களிடம் உன்னுடைய கை வேலையைக் காட்டக்கூடாதென்பது உனக்குத் தெரியாதோ? முருகன் படபடப்புடன் கேட்டான்.