பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பெரும் பெயர் முருகன்

முருகன் மீண்டும் வந்து சிங்காதனத்தில் அமர்ந்தான். விலங்கு பூண்ட பிரமதேவன்மேல் கண்ணே ஒட்டினன். உடனே, சே சே! இப்படியா பூட்டுவது? காலுக்கு இரட்டை விலங்கு பூட்டிவிட்டாயே. பட்டோலேயில் எழுதிய கைக்கு அல்லவா ஒரு விலங்கு பூட்டவேண்டும்? காலுக்கு ஒன்று, கைக்கு ஒன்று-இப்படி இரட்டை விலங்கு பூட்டு. அப்போது தான் இவனுக்குப் புத்தி வரும்' என்று ஆண்டவன் ஆணேயிட்டான். பிரமதேவன் இரட்டை விலங்கு பூண்டான்; காலில் அல்ல; காலில் ஒன்று, கையில் ஒன்று - ஆக இரட்டை விலங்கு. பாவம்! அடியவன் இன்னும் பிறவி எடுக்கவில்லை. அவனேப் பிறக்கும்படி ஏற்பாடு செய்து எழுதியதற்கு இரு விலங்கு!

அருணகிரிநாதப் பெருமான் திருவுள்ளத்தில் இந்தக் காட்சி தோன்றியதோ என்னவோ, தெரியாது. அவர் திருவாய் மலர்ந்தருளிய கந்தர் அலங்காரத்தில் அற்புத மான பாட்டு ஒன்று வருகிறது. அந்தப் பாட்டைப் படித்துச் சிந்தித்து ஆழ்ந்தபோது இருவிலங்கு பூண்ட பிரமதேவன் என் கண்முன் நின்ருன். பாட்டு இதுதான்.

பங்கே ருகன் எனப் பட்டோ லையில்இடப் பண்டுதளை தன்காலில் இட்டது அறிந்தில

னே? தனி வேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ்

சிலம்பு புலம்பவரும் - எம்கோன் அறியின் இனிநான்

முகனுக்கு இருவிலங்கே. (பங்கேருகன்-பிரமதேவன். பட்டோலே - கணக்கெழுதும் ஒலை. தளை - விலங்கு. பொங்கு ஒதம் - பொங்கும் கடல்.