பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை விலங்கு 148

வாய் விட-அலற. பொன்னஞ் சிலம்பு-வெண்பொன்னுலாகிய கிரவுஞ்ச மலே.)

குட்டிச் சிறையிருத்தின அப்போது முருகனைப் பார்த்து மரியாதை செய்யாமல் மேலே நடந்தது பிரமன் கால். அப்போது போட்ட விலங்கு காலுக்கு. இப்போது குற்றம் செய்தது கை; அதற்கும் சேர்த்துப் போடுவது தானே முறை? i.

கடிந்தாரைச் சொல்லி அழு

கால்விலங்கு போட்டுவைப்போம் தொட்டாரைச் சொல்லி அழு

தோள்விலங்கு போட்டுவைப்போம் என்று தம் அன்புக் குழந்தையைத் துன்புறுத்துகிற வருக்குக் கைவிலங்கும் கால்விலங்கும் போடப்புகும் தாயைப் போல, முருகனும் கால் விலங்கும் கை விலங்கும் போடுவதுதானே பொருத்தமானது? அந்தக் குழந்தை யினிடம் பெற்ற தாய்க்கு இருக்கும் கருணையை விட, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் தாயாக இருக்கும் முருகனுடைய கருணை சிறந்தது அல்லவா?