பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகாசல வேலவன்

அருணகிரி நாதர் பாடிய அற்புதமான நூல்களுள் கந்தர் அநுபூதி, சுருங்கிய உருவத்தில் செறிந்த பொருளே உடையதாய் விளங்குகிறது. முருகனது திருவருளால் பெற்ற அநுபவத்தின் சிறப்பைப் பலபடியாக எடுத்துச் சொல்வது அது. கந்தவேளின் திருவருளால் அநுபூதி பெற்று, விருந்துண்டவன் ஏப்பமிட்டாற் போலத் தம் அநுபவாதிசயத்தைப் பாடியது அநுபூதி,

தாயுமானவர்,

கந்தர் அது பூதிபெற்றுக் கந்தர்அது பூதிசொன்ன எந்தைஅருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ என்று பாடியிருக்கிரு.ர். -

அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலியவற்றைப் பாடிய பிறகு, திருவகுப்பை யும் கந்தர் அநுபூதியையும் பாடினர் என்பர். இந்தப் பூத உடலைப் பிறர் போக்குமாறு போக்காமல் கிளி உருவம் பெற்று இறைவன் திருக்கரத்தில் அமர்ந்து அநுபூதிப் பாக்களைப் பாடியதாகச் சொல்வதும் உண்டு. மற்றப் பாக்களேப் பாடிய கிலேக்கும் அநுபூதிப் பாடல்களைப் பாடிய கிலேக்கும் வேறுபாடு உண்டு. பூத உடலின் தொடர்பின்றி உயர்ந்த நிலையில் சுக சொரூபம் அடைந்த ஏமாப்பில் பாடியது அது. -

சூத்திரங்களைப்போல விரிந்த கருத்தும் சுருங்கிய சொல்லமைதியும் உடைய கலிவிருத்தங்களால் ஆனது அநுபூதி. ஐம்பத்தொரு பாடல்களும் ஐம்பத்தொரு