பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகாசல வேலவன் 145

நூலுக்குச் சமானமானவை. திருப்புகழ், அலங்காரம், திருவகுப்பு ஆகிய நூல்களில் விரிவாகச் சொல்லப் பெறும் பல செய்திகள் அநுபூதியில் இல்லை. அநுபவத்தை யும் தத்துவப் பொருளேயும் துண்ணிய கருத்துக்களேயும் செறிவுறக் கொண்டவை அநுபூதி மணிப் பாக்கள்.

பல பல தலங்களுக்குச் சென்று திருப்புகழ்ப் பாக்களைப் பாடிய பெரியார் அருணகிரி நாதர். சைவ சமயாசாரியர்களும், ஆழ்வார்களும் தம்முடைய திருவாக் காற் புனைந்த தலங்கள் சிறப்புப் பெறுவது போல, அருணகிரியார் திருப்புகழால் பெருமை பெற்ற தலங்கள் பல. கந்தர் அலங்காரத்திலும் சில தலங்களைக் குறிப்பிடு கின்ருர். அப்படியே திருவகுப்பிலும் தலங்களின் பெயர் கள் வருகின்றன. ஆனல் கந்தர் அநுபூதியில் பல தலங்கள் வரவில்லை. நுண் பொருளைச் சுருங்கச் சொல்லும் அநுபூதி யில் உலகுக்குப் புறம்பான மேல் கிலேயில் கின்று பாடும் பாடல்களே அமைந்தமையின் உலகில் உள்ள தலங்களின் கினேவு வராதது இயல்பே ஆகும்.

ஆயினும் ஒரே ஒரு தலத்தை மாத்திரம் அநுபூதியில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிரு.ர். .

கூகா எனஎன் கிளைகூ டிஅழப். போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே.

இந்தப் பாட்டில், "நாகாசல வேலவ” என்ற இடத் தில் நாகாசலம் என்ற தலம் வருகிறது. நாகாசலம் என்பது கொங்கு காட்டிலுள்ள திருச்செங்கோட்டுக்கு ஒரு பெயர். அது மிகப் பழைய தலம். சிலப்பதிகாரத்தில் அதைப் பற்றிய செய்தி வருகிறது. அங்குள்ள முருகனைச் சிெங்

பெரும்-10 - - - -