பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் உருகும்

என்றும் இளையவனும் இணேயில்லா அழகனுமாகிய முருகனே நாம் எப்போது காணப்போகிருேம்! அவன் திரு மேனி அழகு முழுவதும் காணும் திறமை, உடம்பெல்லாம் கண்ணுகப் படைத்தாலும் உண்டாகாது. அவன் பாதத் தைக் கண்டாலே போதும். மனக்கவலையெல்லாம் போக்கி விடலாம். தனக்கு உவமை இல்லாத முருகனுடைய தாளே மனசினலே தியானித்தால் கவலே தீரும்.

தனக்குவமை இல்லர்தான் தாள்சேர்ந்தார்க்

- கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

என்று திருவள்ளுவர் கூறியிருக்கிருரல்லவா?

ஆதலின் மனசிலே முருகனுடைய பாத தாமரையைப் பதித்துவிட்டால் எல்லாவிதமான கவலேகளும்போய்விடும். அது சரிதான்; ஆனல் அவனுடைய பாத தாமரை மன சிலே பதியுமா? அது தாமரை ஆயிற்றே. அலங்காரமும் அழகும் பொருந்திய அரவிந்த மலரல்லவா அவன் தாள்? நம் மனசோ கல்; திண்ணிதான கல்; கனமான கல். தாமரை நீரில் அல்லவா மலரும்? கல்லிலே மலருமா? அட கடவுளே! தாமரையைக் கல்லிலே முளைக்க ஒருவழி வைத் திருக்கக் கூடாதா? நீரிலேதான் அது மலர வேண்டும் என்ற கியதியை ஏன் வைக்க வேண்டும்?

தாமரை கல்லில் மலர வேண்டாமே! நெஞ்சு கல்லாக இருக்கிறதே, அதை மாற்றி நீர்ப்பொய்கையாகச் செய்து விட்டால் என்ன? தாமரை மலராக கல்லே வைத்துக் கொண்டு என்ன செய்வது?