பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் உருகும் 155

திணியான மனேசிலை மீதுனதாள் அணியாரர விந்தம் அரும்புமதோ என்று அருணகிரிநாதரே ஏங்கிப்போேைர. கல்லுக் குள்ளே வலிய கல்லாகிற நெஞ்சத்திலே அணியார்ந்த சரணுரவிந்தம் அரும்புமா? இந்தக் கவலையை நீக்குவார் լյirti?

ஆம், நெஞ்சு கல்லாக இருப்பது மாறவேண்டும். நீராக மாறிவிடவேண்டும். கல்லேப் போலக் கட்டியாக இருக்கிற பனிக்கட்டி நீராக உருக வில்லையா? பனிக்கட்டி யாக இருக்கும் போது அது கட்டிப் பொருள்; உருகிவிட் டால், நீர்ப்பொருள். அது மாதிரி நெஞ்சு திண்ணியதாக இருந்தால் கல். உருகிவிட்டால், நீராளமாக உருகி விட் டால், முருகனுடைய அருணதள பாத பத்மம் மலரும் இட விடலாமே. ஆகவே பாத தாமரையைக் கல்லிலே 85חש பதிக்கும் வித்தையைத் தேடி அலைவதைவிட இந்தக் கல்லே உருக்கும் வித்தையை நாடலாமே! - -

'நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருக' என்று அருண கிரிப் பெருமான் வழிகாட்டி யிருக்கிருரே. நெஞ்சமாகிய கனத்த கல்லும் நெகிழ்ந்து உருக வழி இருக்கிறது போல் இருக்கிறதே. சந்திரகாந்தக் கல் உருகுவதாகக் கேட்டி ருக்கிருேம். சந்திரன் கடன் வாங்கும் தேசுடையவன். சூரியனிடத்திலிருந்து ஒளியை வாங்கிக் கொண்டு உதவு கின்றவன். அவனுடைய சின்னஞ் சிறிய ஒளியே ஒரு கல்லே உருக்குமானல் சோதியிற் பெரிய சோதியாகிய முருகனுடைய தேசு கல்லே உருக்காதா? நிச்சயமாக இந்த மனசாகிய கல் உருக வழி உண்டு. அப்படி உருகுவதற். குரியதந்திரத்தை யார் சொல்லியிருக்கிருர்கள்? அருண கிரிப் பெருமானையே கேட்கலாமே. ਾਂ

'இந்த மனசாகிய கல் திண்ணியது. ஆண்டவன். பாதமோ தாமரை. தாமரை கல்லில் அரும்பாது என்று