பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரும் பெயர் முருகன்

அவர் சொன்னபோது பயந்து போைேம். ஆல்ை, 'நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருகும்' என்று கருணை யோடு அவர் சொன்னதைப் படித்தபோது கொஞ்சம் கம்பிக்கை உண்டாயிற்று. 'நெஞ்சு உருகுமா? பாத தாமரை மலரும்படி நீராகுமா? என்று கேள்விமேல் கேள்வி போட்டுப் பார்க்கலாம். 'கருணைக்கு அருணகிரி’ என்று சொல்லுவார்களே; அவர் கருணே மிகுதியில்ை நமக்கு ஒரு வழி காட்டட்டுமே!

ஒஹோஹோ முன்பே வழி காட்டியிருக்கிருரே. அதை நாம் கவனிக்கவில்லையே! உருகுவதற்கு வழியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிரு.ர். அதற்காகத் தானம் கொடுக்க வேண்டாம். தவம் செய்ய வேண்டாம். காசு செலவு செய்ய வேண்டாம். 'முருகன், குமரன், குகன்' என்று மொழிந்து கொண்டே இருந்தால் போதும். அந்தத் திருநாமங்களில் உள்ளத்தை ஈடுபடுத்தி வாயில்ை மொழிந்தால் மனம் நெக்குவிடும், நெக்கிவிட்டு உருகும். நெஞ்சு உருகினல் ஆண்டவன் அருள் செய்வான். அவன் பாத தாமரை கெஞ்சில் வந்து கிற்கும். அதாவது, அவனே உள்ளத் திருக்கோயிலில் வெளிப்பட்டு விளங்குவான்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய் என்று அருணகிரி மாமுனிவர் முருகனைக் கேட்கிரு.ர். முருகன், குமரன், குகன் என்று விடாமல் அன்போடு மொழிந்தால் உள்ளம் உருகும்; அப்போது நெஞ்சத்தின் கனம் நீங்கும்; திண்மை ஒழியும்; அது கல்லின் தன்மையை இழந்து நீரின் தன்மையை அடையும், அன்பினால் உருகிய உள்ளத் தடாகத்திலே இள முருகன் பாத தாமரை மலரும்; தாளாகிய அணியார் அரவிந்தம் அலரும்.