பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைப் புலவன் 15.

புலவர் ஒருவர் இருந்தால் அவரே, "இது சிறந்தது” என்று சொல்லலாம். அத்தகையவர் ஒருவரும் பாண்டிய னுக்குக் கிடைக்கவில்லை. மூல நூலைத் தந்த ஆலவாய்ச் சொக்கரிடத்திலே போய் முறையிட்டுக் கொண்டான். இறைவர், "இலக்கணத்தை மதிப்பிடும் பெருமை படைத்தவன் முருகன் ஒருவனே. அன்றியும் நம்முடைய உள்ளக் கருத்தை உணர்பவர் நம் குழந்தையையன்றி வேறு யார் உள்ளார்?' என எண்ணி, இவ்வூரில் வணிகர் வீதியில் ருத்திர ஜன்மன் என்ற ஊமைக் குழந்தை ஒருவன் இருக்கிருன். அவன் முருகனுடைய கூறுடையவன். அவனே அழைத்து வந்து தக்க மரியாதை பண்ணி, உயர்ந்த ஆதனத்தில் இருத்தி, உரைகளெல்லாம் வாசித்தால், எதைக் கேட்கும் போது அவன் புளகாங்கிதம் அடைந்து கண்ணிர் விட்டு ரசிக் கிருனே அதுவே சிறந்ததாகும்’ என்று அருள் செய்தார். -

பாண்டியன் அவ்வாறே செய்தான். மற்றப் புலவர்கள் தம் உரைகளே வாசிக்கையில் சும்மா இருந்த ருத்திர ஜன்மன் நக்கீரர் உரையைக் கேட்டுக் கேட்டுப் புளகாங் கிதமுற்று உடல் குலுங்கக் கண்ணிர் வார இன்புற்ருன். அதல்ை நக்கீரர் உரையே சிறந்ததென்று கொண்டான் பாண்டியன். அவ்வுரையே பிறகு வழங்கி வரலாயிற்று.

இப்படிப் புலவருள் தலைவகை இருந்ததோடு, சங்கப் புலவர்களின் தகுதியறியும் அதிகாரியாக வும் முருகன் இருந்திருக்கிருன். இந்தச் செய் தியை தினந்தே நக்கீரர் முருகனே, "நூலறி புலவ' என்று திருமுருகாற்றுப் படையில் பாடுகிரு.ர். அந்தக் காலத்தில் நூல் என்பது இலக்கணத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருந்தது. எனவே அத்தொடருக்கு இலக்கணத்தின் தகுதி தேர்ந்து