பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரும் பெயர் முருகன்

என்று புலப்படுத்துகிருர். செங்கேழ் முருகன் காத வித்த வான் தங்கிய வரைகும் உலகம் என்று நச்சி ஞர்க்கினியர் இதற்குப் பொருள் எழுதுவர். சேய் என்றும் சேயோன் என்றும் முருகனுக்குப் பெயர் தொன்றுதொட்டு வழங்கும். சேய் என்பது குமாரன் என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்று கூறுவார் உண்டு. ஆனல் பழைய தமிழ் நூல்களில் அச்சொல் வரும்போதெல்லாம் உரையாசிரியர்கள் 'சிவந்த நிறமுடை யவன்' என்றே பொருள் எழுதுவார்கள். தொல்காப்பியர் இங்கே சேயோன்' என்று முருகனைக் குறிக்கிருர். அதற்கு நச்சினர்க்கினியர், செங்கேழ் முருகன்' என்று உரை வகுத்தார். கேழ் என்பது நிறம், சிவந்த கிறமுடைய முருகன் என்பது பொருள். முருகன் செங்கிறமுடையவன் என்பதை நக்கீரர், செய்யன் சிவந்த ஆடையன்’ என்று திருமுரு காற்றுப்படையில் கூறுகின்ருர். சிவபெருமான் பவழம் போன்ற மேனியுடையவன். அப்பெருமானினின்றும் வேறல்லாத முருகனும் அங்கிறமே உடையவன். ஆகை யால் பெருந்தேவனர் என்ற சங்கப் புலவர் முருக னுடைய துதி ஒன்றில்,

பவழத் தன்ன மேனி

என்று பாராட்டுகின்ருர் பவளம்போல் மேனியிற் பால்வெண் ணிறும்' என்று சிவபெருமானே அப்பர் சுவாமிகள் பாராட்டியிருக்கிருர் அல்லவா?

சேயோன் மேய மைவரை உலகம் என்று குறிப்பிடும் தொல்காப்பியச் சூத்திரத்தில் மேய என்ற சொல்லுக்குக் காதலித்த’ என்று உரை எழுதுவார் நச்சினர்க்கினியர். மேய என்பதும் மேவிய என்பதும் ஒரே சொல்லின் வேறு வேறு உருவம். மேவிய என்பது விரும்பிய என்றும், தங்கிய என்றும் இருபொருளேத் தரும். முருகன் குறிஞ்சி கிலத்தில் விரும்பித் தங்குகிருன்.