பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் கடவுள் 19

மேகம் சூழ்ந்த மலை நிலம் என்ற பொருள் தோன்றக் குறிஞ்சியை, 'மைவரை உலகம்' என்று சொல்லுகிருர், மை.மேகம். மேகத்தைக் கூறினமையால் மழை உண் டென்பதும், அந்த மழையால் அருவி உண்டென்பதும், வளம் உண்டென்பதும் பெறப்படுகின்றன. இயற்கைத் தேவியின் பருவ வளப்பத்தைப் புலப்படுத்தும் பகுதியாக விளங்குவது மலே. அந்த மலே வளத்தைக் கண்டு காதலித்த முருகன், இதுவே என் கிலம்’ என்று விரும்பித் தங்குகிருன்.

அங்கே குறவர் முதலியவர் கூடி வெறியாட் டெடுத்து முருகனே வழிபடுவார்கள். குறவர் நாகரிக மற்ற சாதியினர் என்று அவன் கினைப்பான? அவர் களுடைய அன்பை உணர்ந்து அவர்களுக்கு அருள் செய்யும்பொருட்டு வெளிப்படுவான். る

தேனும் தினேயும் ஊனும் மலேநெல்லும் வைத்து, ஆட்டை அறுத்துப் பலிகொடுத்துக் குரவைக் கூத்தாடிக் குறவரும் குறத்தியரும் ஆடும் ஆட்டத்துக்கு வெறியாட் டென்று பெயர். அது முருகனே கோக்கிச் செய்வது. குறிஞ்சி நிலத்தில் இந்தப் பூசை நிகழும். இதை நடத்தும் பூசாரிக்கு வேலன் என்று பெயர். ...

வெறியாட்டில் ஆட்டுப்பலி முதலியன நிகழ்ந்தாலும் முருகன் அன்பு ஒன்றையே கருதி வெளிப்படுவான். குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழிஇ வெறி அயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறி அயர்ப ஆகலின், ஆண்டு முருகன் வெளிப்படும் என்ருர் என்று நச்சிஞர்க்கினியர் குறிஞ்சி நிலத்தின்மேல் முருகனுக்கு உண்டான காதலுக்குரிய காரணத்தை விளக்குகிருர்.

முருகனத் தெய்வமாக உடைய குறிஞ்சி கிலத்துக்குச் சிறப்பான பருவம் ஐப்பசி கார்த்திகை மாதங்களாகிய