பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 . பெரும் பெயர் முருகன்

கூதிர் காலமாம். சிறு பொழுதுகளில் நள்ளிருள் யாமம் சிறந்ததாம். .

காதலர் முதல் முதலாகக் கண்டு காதல் கொள் வதற்குக் குறிஞ்சி கிலம் சிறந்தது. ஆகவே காதல் நாட கத்தில் குறிஞ்சித் திணை என்ற பிரிவு காதலர் கூடுதற்குக் காரணமான செய்திகளையும் கூடும் செய்திகளையும் விரிவாகச் சொல்லும். முருகன் உண்மைக் காதலர்கள் ஒன்றுபடுவதற்குரிய திருவருளேச் செய்பவன் என்ற கருத்தைத் தமிழர் கொண்டிருந்தனர் என்று இதைக் கொண்டு சொல்லலாம் அல்லவா?

கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன்பே காதலர் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு அன்பு செய்வதைக் களவுப் புணர்ச்சி என்று சொல்வார்கள். வள்ளியெம்பிராட்டி யிடம் முருகப் பெருமான் காதல் செய்தது போன்றது இது. இந்த கிகழ்ச்சியில் பிறர் அறியாவாறு, மிகவும் அரியவளாகிய காதலியைத் தேடிக்கொண்டு காதலன் வருவான். ஐப்பசியும் கார்த்திகையுமாகிய வாடைக் காலத்தில் வந்து காதலியைக் காண்பது அருமை; நள்ளிருளில் காண்பதும் அத்தகையதே. சலார் சலா ரென்று வாடையோடு நீர்த்துளி வீசுவதாலும், நடு இரவில் விலங்குகள்:தம் விருப்பப்படி ஆணும் பெண்ணும் சேர்வதாலும் காதலியைக் காணவேண்டு மென்றிருக்கும் காதலனுக்கு ஆர்வம் மிகுதியாகும். அதிகமாகப் பசித் தவனுக்கு உணவு கிடைத்தால் அதிகமாக ருசிக்கும். அது போல இந்த இடையூறுகளால், காணமுடியாதோ என்று அதிகமாக வேகங்கொண்ட தலைவன் பெருமுயற்சி செய்து தலைவியைக் கண்டு அளவளாவில்ை அப்போது உண் டாகும் இன்பம் மிகச் சிறந்ததாக இருக்கும். தலைவனும் தலைவியும் ஒன்றுபடும் இன்பம் மிக அதிகமாகும்படியாகச் செய்யக் காரணமாக இருப்பதால், கூதிர் காலமும் அர்த்த