பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் கடவுள் 21.

யாமமும் குறிஞ்சிக்குச் சிறந்தவை யென்று அமைத்திருக் ஒருர்கள். இதைப் பின்வருமாறு கச்சிர்ைக்கினியர் எழுதியிருக்கிரு.ர். - -

இனிக் குறிஞ்சியாவது புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தபின், களவு நீட்டிப்பக் கருதும் தலே வற்குக் களவினேச் சிறப்பிக்குங்கால், தலைவி அரியளாக வேண்டும். ஆகவே, அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடை யாமமும்" என்பது. என்னே? இருள் தூங்கித் துளிமிகு தலின் சேறல் அரிதாதலானும், பானட் கங்குலிற்: பரந்துடன் வழங்காது" மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலிற் காமக் குறிப்புக் கழியவே பெருகுத லானும், காவல் மிகுதி நோக்காது வரும் தலைவனக் குறிக்கண்‘ எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகு தலின் இங்கிலத்திற்குக் கூதிர்காலம் சிறந்ததெனப்படும்.'

வேலன் ஆடும் காந்தள் குறிஞ்சி நிலத்தில் வெறியாடும் பூசாரி தன் கையில் வேலைப் பிடித்திருப்பதால் அவனுக்கு வேலன் என்று பெயர். அவன் கழற்சிக்காய்களே வைத்து நிமித்தம் பார்ப்பான். முருகனுடைய விக்கிரகத்தைப் பாதுகாப்ப தால் அவனுக்குப் படிமத்தான் என்றும் பெயருண்டு. படிமம் - விக்கிரகம். அவன் ஆடும்பொழுது காந்தள்

1. புணர்தலாகிய பொருளை உடையது. 2. நள்ளிரவு. 3. சேறல் - செல்லுதல். 4. பால் நாட்கங்குல் கள்ளிரவு. 5. வழங்காது - நடக்காமல். 6. மாவும் புள்ளும் -விலங்கும்பற வையும். 7 வதிதலின் - தங்குவதால், 8. கழியவே..மிகுதியாக. 9. குறிக்கண் - குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில்,