பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரும் பெயர் முருகன்

೯Tಣp பூவைச் சூடி ஆடுவான். காந்தள் முருகனுக்கு அடையாளக் கண்ணி. அதனச் சூடி ஆடுவதால் வெறி யாட்டுக்குக் காந்தள் என்று ஒரு பெயர் உண்டு.

வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் என்று அந்தக் கூத்தைப்பற்றித் தொல்காப்பியம் சொல்கின்றது. தெய்வத்திற்குச் செய்யும் கடன்களே அறியும் சிறப்பினேயும், உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினேயும் உடைய வேலன் தெய்வமேறி ஆடு தலைச் செய்த காந்தளும் என்பது நச்சினர்க்கினியர் உர்ை. வேலன் ஆவேசம் வந்து ஆடுவான்.

சிறுபான்மை குறமகளிரும் ஆவேசம் வந்து ஆடுவது உண்டு. முருகனைக் கூவி அழைத்துப் பாடுவதல்ை அகவல் மகளென்தும், முறத்தில் கெல்லே வைத்துக் கட்டுப் பார்த்து கிமித்தம் கூறுவதல்ை கட்டுவிச்சி, கணிகாரி என்றும், தெய்வமேறி யாடுதலால் தேவராட்டி என்றும் அவளேக் கூறுவார்கள்.

காதலனக் காணுமல் சோர்வுற்றிருக்கும் காதலியைக் கண்டு, அவளுடைய தாய், இவளுக்கு இந்தச் சோர்வு ஏன் வந்தது?" என்று ஆராயப் புகுவாள். வேலனே அழைத்துக் கழங்கு கொண்டும், கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுக்கொண்டும் நிமித்தம் பார்க்கச் செய் வாள். அவர்கள், இது முருகனல் வந்தது என்று சொல்ல, உடனே தாய் அப்பெருமானுக்குப் பூசை போட்டு வெறியாட்டெடுப்பாள். இதைத் தொல்காப்பியம் பின்வருமாறு சொல்லும்: - . .

கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும். ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்.