பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் கடவுள் 23

தேவராட்டியும் பூசாரியும் ஆகிய இருவரும் கட்டிலுைம் கழங்கிலுைம் ஆராய்ந்து, இது வெறியாட்டுச் செய்தால் திருமென்று ஒன்றுபட்டுச் சொன்னபோது அப்படியே செய்யத் தொடங்கும்போது செவிலி பேசு வாள்' என்பது இதன் பொருள். -

வேலும் மயிலும்

முருகப்பெருமான் வேற்படையையும் மயில் வாகனத் தையும் உடையவன். இவ்விரண்டையும் தியானித்தல் முருகனடியார் இயல்பு. 'வேலும் மயிலும்” என்பதை மந்திரம்போல உருப்போடுதலும் உண்டு. தொல்காப்பி யத்துக்கு உரை வகுத்த பெரியார்கள் இவ்விரண்டைப் பற்றியும் இரண்டிடங்களில் சொல்லியிருக்கின்றனர்.

பெரும்பாலும் போர்ைப்பற்றியும் வீரத்தைப்பற்றியும், சிறுபான்மை அறம் முதலியவற்றைப் பற்றியும் சொல்லும் பகுதிக்குத் தமிழர் புறம் என்று பெயர் வைத்திருக்கிருர்கள். புறத்தினேயில் பல திணைகளும் துறைகளும் உண்டு. வேலேப் பாராட்டுவது ஒரு துறை. வேலே எடுத்துச் சொல் வதற்குக் காரணம் அது மற்றப்படைகளிலெல்லாம் சிறந்த தாக இருப்பது. வில், வாள், அம்பு, தோமரம் முதலிய பல ஆயுதங்களைப் பழைய நூல்கள் சொல்கின்றன. ஆலுைம் வேலுக்கே மிக்க சிறப்பு உண்டு. யானையைக் கொல்லுதல் பெரிய வீரம். அதற்கு உதவுவது வேல்.

பெரும்பகை தாங்கும் வேலி னுைம் - என்று வேலைச் சிறப்பிக்கும் துறைக்கு இலக்கணம் வகுத் தார் தொல்காப்பியர். போர் செய்யாமலே தன்னக் கண்ட மாத்திரத்திலே பெரிய பகைவர் பயந்து கிற்கும்படியாகச் செய்யும் வேல்' என்று இதற்குப் பொருள் கொள்ள,