பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரும் பெயர் முருகன்

வேண்டும். வேலை பன்றி மற்றப் படைகளைச் சிறப்பிப்பதும் மரபுதான். வேலைச் சொன்னுலும் அதற்கு இனமாக உள்ளவற்றையும் கொள்ளுவது இலக்கணத்துக்குப் புறம் பல்ல. வேலே எடுத்துச் சொன்னதற்கு அதன் சிறப்புத் தான் காரணம். இதை நச்சினர்க்கினியர் உரையில் விளக் குகிருர்; காத்தல் தொழிலன்றி அழித்தல் தொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும், முருகற்கு வேல் படை ஆதலானும், சான்ருேர் வேற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக் கூறி, ஏனைப் படை க்ளெல்லாம் உத்தியாற் பெற வைத்தார்.’

முருகன் திருக்கரத்தில் உள்ளது சிறப்புக்கு ஒரு காரணம் என்று அப் பெரியார் கூறுகிரு.ர்.

தொல்காப்பியத்தில் மரபியல் என்பது ஒரு பகுதி. இன்ன பொருளுக்கு இன்ன பெயர் வழங்குவது மரபு என்று சொல்வது அது. சேவல் என்ற பெயர் சிறகுடைய பட்சிகளுக்கு வரும்; ஆனல் மயிலுக்கு மட்டும் வராது. இதை ஒரு குத்திரம் சொல்கிறது.

சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயில்லங் கடையே

என்பது அச் சூத்திரம். இதற்கு உரை வகுத்த பேராசிரி யர் என்னும் பெரியார், சேவல் என்பது மயிலுக்கு வாராத தற்குக் காரணம் என்ன வென்பதை மாயிருந் தூவி என் பதிலிருந்து ஊகித்துச் சொல்கிருர். 'மாயிரும் தூவி மயில் என்ற தல்ை அவை தோகையுடையவாகிப் பெண் பால் போலும் சாயல ஆகலான், ஆண்பால் தன்மை இல . என்பது கொள்க’ என்று எழுதுகிருர், உடனே, எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது என்று எழுதியிருக்கிருர். ஆண் தன்மையாகிய வீரமுடையவற்றிற்குச் சேவல் என்ற பெயர் பொருந்தும்