பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் கடவுள் 25

ஆண் மயிலுக்குத் தோகை உண்டு. அந்தத் தோகை அதைப் பின்னும் மென்மையுடையதாகக் காட்டுகிறது. ஆகையால் மென்மைத் தோற்றமுடைய மயிலுக்குச் சேவல் என்ற பெயர் கூடாதென்பது இலக்கணக்காரர் கொள்கை. வீரத்தோற்றம் இருந்தால் அதைச் சேவல் என்று சொல்ல லாம். முருகன் ஊரும் மயில் வீரத்தோற்றத்தை உடை பது. அது பக்கரை விசித்ரமணி பொற்கலனே யிட்ட நடை பட்சியெனு முக்ர துரகம்' என்றும், தீரச் செம் பொன் மயில் (திருப்புகழ்) என்றும் பாராட்டப்பெறுவதல் லவா? ஆகவே அதற்குச் சேவல் என்ற பெயர் கொடுக்க லாம் என்று பேராசிரியர் சொல்கிருர். தீராதி திரப் பெரு மாளுடைய வாகனம் அல்லவா? மற்றக் காட்டு மயில் களுக்கு இல்லாத சிறப்பு அதற்கு இருப்பது ஆச்சரியம் அன்று.