பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் நூல்கள்

முருகப்பிரானுடைய சரிதம் விரிந்தது. சிவபெருமானு, டைய அருள் திருவிளையாடல்களும் வீர விளையாடல்களும் பலவாதல் போல, முருகவேளுடைய விளையாடல்களும் பல. அன்றியும் அவனுடைய இளமைத் திருவிளேயாடல் கள் பல பல வகையாக இருக்கின்றன.

முருகனுடைய வரலாற்றைக்கூறும் புராணம் ஸ்காந்தம், பதினெண் புராணங்களில் ஒன்ருகிய அதுவே எல்லாப் புரணங்களையும்விடப் பெரியது. அது லக்ஷம் கிரந்தமுடை யது. பல பகுதிகளே யுடையது. அதனுடைய ஒரு பகுதி யையே தமிழில் கச்சியப்ப சிவாசாரியார் மொழி பெயர்த்தார்.

'எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே’ என்பது தமிழில் வழங்கும் பழமொழி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள் நான்கோடு, பல தெய்வங் களின் வரலாறுகளும், தலச் செய்திகளும், வேறு பல விஷ யங்களும் அமைந்த பெருங்கடல் வடமொழிக் கந்த புராணம். அதல்ைதான் அந்தப் பழமொழி வழங்குகிறது. கந்த புராண நூலாசிரியர் இதனேயே ஒரு பாட்டில் குறிக்கிரு.ர். -

புதுமயில் ஊர்பரன் புராணத் துற்றிடாக் கதையிலை; அன்னது கணிதம் இன்றரோ என்று அவையடக்கத்தில் கூறுகிருர்.

வடமொழிக் கந்த புராணம் சனற்குமார சங்கிதை, குத சங்கிதை, பிரம்ம சங்கிதை, விஷ்ணு சங்கிதை, சங்கர