பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரும் பெயர் முருகன்

யையும், முருகன் திருவவதாரக் கதையையும் தெரிவிக்கி ருர் மகாபாரதத்திலும் முருகனுடைய வரலாறு வருகிறது. வடமொழியில் மிகச் சிறந்த கவியாக விளங்கிய காளி தாசன் முருகனுடைய திருவவதாரத்தை ஒரு காவிய மாகவே பாடியிருக்கிருன். அதற்குக் குமார சம்பவம் என்று பெயர். சுவை மலிந்த பிழம்பாக விளங்குவது அது.

ஆகமங்களுள் முருகவேள் வழிபாட்டைக் கூறும் தனிச் சிறப்பையுடையது குமார தந்திரம் என்பது.

பிற்காலத்தில் வேலுச்சாமிக் கவிராயர் என்பவர் கந்த புராணத்தை வெண்பாக்களில் பாடினர். கந்தபுராண வெண்பா என்று அதன் பெயர் வழங்கும்.

முருகவேள் சூரசங்காரம் செய்து, இந்திரன் முதலிய தேவர் வேண்டத் தெய்வயானை அம்மையாரைத் திரு மணம் செய்து கொண்ட வரலாற்றை மிக விரிவாக ஒரு புலவர் தமிழ்ச் செய்யுளாகப் பாடியிருக்கிரு.ர். அதற்குத் தெய்வயானையம்மை புராணம் என்று பெயர்.

அப்படியே வள்ளி நாச்சியார் வரலாற்றை ஒரு

புலவர் வள்ளியம்மை புராணம் என்ற பெயரோடு பாடி யிருக்கிருர். பிற்காலத்தில் வள்ளியம்மையார் திரு மணத்தை நாடகமாகவும், கும்மியாகவும், ஒயிற் கும்மி யாகவும் பாடியவர்கள் பலர். திண்ணேதோறும் ஊர் தோறும் அந்தப் பாடல்களே இசையும் தாளமும் பொருந்த யாவருடைய உள்ளத்தையும் கவரும் வண்ணம் பலர் பாடிவருவார்கள். # -

இவற்றையன்றித் தமிழிலும் வடமொழியிலும் அமைந்த தலபுராணங்கள் பலவற்றிலும் முருகனுடைய வரலாறுகள் அமைந்து கிடக்கின்றன. ஆறு படை வீடு. களுள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழகி என்னும் முன்றுக்கும் தமிழில் புராணங்கள் உண்டு. குன்று.