பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் நூல்கள் 29

தோருடல் பல தலங்களின் தொகுதி. அத்தொகுதியில் அடங்கிய மலைத்தலங்களில் திருத்தணிகை, மயிலம், குன்றக்குடி முதலிய பல தலங்களுக்குத் தனித்தனியே புராணங்கள் இருக்கின்றன. மலேயல்லாத வேறு தலங் களிற் சிலவற்றுக்கும் புராணங்கள் உண்டு. இவற்றை பன்றிச் சிவ புராணங்களிலும் சிவஸ்தல புராணங்களிலும் இடையிடையே முருகன் அருள் விளேயாட்டுச் சிறப்பை விளக்கும் இடங்கள் பல. மதுரைப் புராணமாகிய திருவிளையாடற் புராணத்தில் முருகன் உக்கிரகுமார பாண்டியகைத் திருவவதாரஞ் செய்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் மிக விரிவாகச் சொல்லப் பெறு

இன்றன. இப்படியே பிற புராணங்களில் வெவ்வேறு

செய்திகள் வரும்.

தோத்திரவகையில் முருகனுக்கு அமைந்த புகழ்

நூல்கள் பலப்பல. சங்ககாலத்து நூல்களிடையே

வரும் துதிகள், திருமுருகாற்றுப்படை, உரையாசிரி யர்கள் மேற்கோளாகக் காட்டும் பாடல்கள் என்பன பழமையுடையன. சைவத் திருமுறைகளில் ஒன்பதாங் திருமுறையாகிய திருவிசைப்பாவில் சேந்தனர் திரு விசைப்பா முருகனுடைய துதியாக அமைந்தது. பதினே ராந்திருமுறையில் திருமுருகாற்றுப்படை சேர்ந்திருக்கிறது.

பிற்காலத்தில் கலம்பகம், கோவை, உலா, அந்தாதி,

பிள் ளத்தமிழ் முதலிய பிரபந்த வகைகள் பல முருக னுடைய புகழை விரித்து ஒதுகின்றன. அருணகிரிநாதப்

+

பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழ் முதலிய

அருமறை நூல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ம&லயொளிர் பெருவிளக்கம் போலத் திகழ்கின்றன, கீர்த்தனங்கள், கண்ணிகள் முதலிய இசைப் பாடல்களி லும் நாடோடிப் பாடல்களிலும் முருகனைப் பற்றியவை

LJ6). - -