பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரும் பெயர் முருகன்

இத்தனை நூல்களிலும் முருகனுடைய பிரபாவம் விரிகடல் போலப் பெருகி உள்ளது; அவனுடைய அவதாரம், விளையாடல் முதலிய கதைகள் வருகின்றன. கந்தபுராணத்திற் காணுத பல சரித்திரங்களே வேறு நூல்கள் கூறுகின்றன. பழைய காலத்து நூல்கள் முருக னுடைய செய்திகள் பலவற்றைச் சொல்கின்றன, அவற்றைப் பிற்கால நூல்களிலே காண முடியவில்லை.

காலந்தோறும் அன்பர்கள் முருகனைப் பலபடி யாகத் தியானித்து, பலபடியாகப் புகழ்பேசி, பலபல முறையில் வழிபட்டு, பலபல துதிகள் கூறிப் போற்றி ஞர்கள். முருகனுடைய வழிபாடு பழமைக்குப் பழ மையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் நிலவுகிறது.