பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை


- தமிழர்கள் எப்போதுமே கடவுள் அன்பில் தலைசிறந்தவர் கள். தங்களுடைய வாழ்க்கையில் கடவுளே கினைப்பதற்கும், கடவுள் புகழைப்பேசுவதற்கும், கடவுளே வழிபடுவதற்கும் பல சந்தர்ப்பங்களே அமைத்துக்கொண்டிருக்கிருர்கள். தனித் தனியே வழிபடுவதோடு பலர் கூடி வழிபடுவதற்கு ஏற்ற இடங் களாகிய கோயில்களும், ஏற்ற காலங்களாகிய திருவிழாக்களும் அமைந்து தமிழர் உள்ளத்தில் மேன் மேலும் தெய்வ பக்தியை வளர்க்கும் சாதனங்களாக விளங்குகின்றன.

             தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இப்போது கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப் பழமையானது. பழந் தமிழருடைய கடவுளுணர்ச்சிக்குச் சாட்சியாகத் தக்க பல செய்திகள் அந்நூலில் இருக்கின்றன. எழுத்துக்களுக்கு அவர்கள் வைத்தி பெயரே அவர்களுடைய கடவுளுணர்ச்சியின் முதல் பாடமாக் இருக்கிறது. உயிர் என்றும், மெய்யென்றும் எழுத்துக்களுக்குப் பெயர் வைத்தார்கள். உயிரின்றி மெய் இயங்காது என்று கூறினர்கள். உயிர் வேறு, மெய் வேறு என்ற அறிவு தமிழர் களுக்கு எழுத்தறிவு ஏற்பட்ட போதே வந்து விட்டது என்பதை இந்தப் பெயர்கள் புலப்படுத்துகின்றன.
-
 "பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம் காதல்
  சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்"
என்று காரைக்காலம்மையார் பாடுகிருர். அது போலத் தமிழர் எழுத்துத் தெரிந்துகொண்டபோதே உயிரின் இயல்பையும் தெரிந்து கொண்டார்கள். சொல் இலக்கணம் கற்றபொழுதே இறைவன் திணை பால் என்ற பிரிவுக்கு அப்பாற் பட்டவன் என்று உணர்ந்தார்கள். பொருளிலக்கணத்தில் ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம் இன்னர் என்று வரையறை செய்து போற்றினர்கள். - . . . . . ."