பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ii


தொல்காப்பியத்துக்குப் பின் வந்த நூல்களில், இரண் டாயிர ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய கடைச்சங்க நூல்கள், அக்காலத்துத் தமிழரின் வாழ்க்கை வகைகளே அறிந்து கொள் ளத் துணை செய்கின்றன. தமிழர்கள் உயர்ந்த கருத்துக்களே உடையவர்கள், வளமான மொழியை உடையவர்கள், பல துறை பிலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள் என்ற உண்மையைச் சங்கப் பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கடவுளுணர்ச்சியில் அவர்கள் எவ்வாறு ஈடுபட்டு வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முழுநூல்கள் சில உதவுகின்றன; முழுப்பாட்டுகள் சில துணையாக நிற்கின்றன; பாடல்களின் இடையே வரும் செய்தி கள் பல ஆதாரமாகின்றன. இவற்ருல் தமிழர்களின் வாழ்க்கை விரிவடைய அடையக் கடவுள் வழிபாட்டு முறைகளும் விரி வடைந்து வந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். 

சங்ககாலத்துக்குப் பின்பு கோயில்கள் விரிவான அமைப் பைப் பெறலாயின. ஒவ்வோர் ஊரிலும் கோயிலே நடுகாயகமாக வைத்துச் சமூகத் தொண்டுகளும், கலைகளும், ՅFԱ)Այ உணர்ச்சியும், தெய்வ பக்தியும், அறச் செய்திகளும் வளர்ந்தன. இப்போது நமக்குக் கிடைக்கும் சாசனங்கள் இந்த உண்மை யைக் கல்மேல் எழுத்தாகக் காட்டுகின்றன. கோயில்கள் விரிந்து பெருகியது போலவே கடவுளைத் துதிக்கும் நூல்களும், கடவுளின் பெருமை பேசும் நூல்களும் தமிழில் பெருகின. திரு மால், சிவபெருமான், முருகன் என்ற மூன்று கடவுளரைப்பற்றிய நூல்கள் வர வரக் காவிரி வெள்ளம்போலப் பெருகி மக்கள் உள்ளத்தே தெய்வ பக்தியை வளர்த்தன. ஆழ்வார்களின் பாசுரங்கள் திருமாலின் அடியவர்களுக்கு வேதம்போல உதவு கின்றன. அளவிலுைம் பொருட் சிறப்பிலுைம் அவை மற்றத் திருமால் துதிகளவிட உயர்ந்து ஓங்கி கிற்கின்றன. அப்படியே. சைவத்திரு முறைகளும் அளவாலும் தன்மையாலும் மற்றவற்றை விடச் சிறப்பாக உள்ளன. முருகப் பெருமானுடைய புகழைப் பாடும் நூல்கள் தமிழில் பல இருந்தாலும், அருணகிரிநாதர் அரு ளிச் செய்த திருப்புகழ் முதலிய அற்புத நூல்கள் அளவிலும் அநுபவத்திலும் சிறந்து கிற்கின்றன. அடியார்கள் அவற்றைப் பாடி அடையும் இன்பத்துக்கு இணையே இல்லை.