பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

பழங்கால முதலே தமிழில் முருகவேளேப் பாராட்டும் நூல் கள் பல உண்டு. முதல் திணையாகிய குறிஞ்சிக்குத் தெய்வமாக வைத்துத் தமிழர் அவனைப் போற்றினர்; பல வகையிலே வழி பட்டனர்; துதித்தனர். பழந்தமிழ் நூல்களில் முருகனைப் பற்றி வரும் செய்திகள் பல. அவற்றைத் தொகுத்து அவற்ருல் உணரப் பெறுவனவற்றை வகுத்து எழுத வேண்டுமென்ற விருப்பம் எனக்கு எழுந்தது. முறையாகச் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்து வகை செய்து ஒன்ருேடொன்று இணைத்துப் பார்த்து முருக வழிபாட்டுத்திறம் சங்ககாலத்தில் எவ்வாறு இருந்தது என் பதை வெளியிடும் வகையில் ஒரு பெரிய நூலே எழுதிவிடலாம். சங்ககாலத் தமிழரின் கடவுள் உணர்ச்சி குறித்துப் பின்னும் விரிவாக ஆராய்ந்து சில நூல்களேயே எழுதலாம். அவற்றை எழுத ஒய்வும் வசதிகளும் வேண்டும். to

இந்த எண்ணம் உள்ளத்தில் இருக்கும்போது, முருகனைப் பற்றிய கட்டுரைகள் வேண்டு மென்று அன்பர்கள் கேட்டார்கள். பழைய நூல்களில் வரும் முருகனேப் பற்றிய செய்திகளைக் கொண்டு சில கட்டுரைகளே எழுதினேன். பரிபாடலில் ஐந்தாம் பாடல் முழுவதையும் விளக்கிச் சில கட்டுரைகளே எழுதினேன். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கக்தர் அநுபூதி முதலிய நூல் களில் சில பாடல்களுக்கு ஆராய்ச்சி முறையில் விளக்கம் அமை யும்படி சில கட்டுரைகளே எழுதினேன். அந்தக் கட்டுரைகளின் தொகுதியே இந்தப் புத்தகம். - -

இவற்றிற் பதினேந்து கட்டுரைகள் திருப்புகழ் அமிர்த'த்தி லும் (2.15, 18), ஏனேயவை அமிர்தவசனி'யிலும் ( 1, 16, 17, 19, 20, 21) வெளியானவை. இவற்றை எழுதுவதற்கு அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களே தூண்டுகோலாக இருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் முதல் நான்கும் தொல்காப்பியம், சங்கநூல்கள் ஆகியவற்றிற் கண்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. அப்பால் ஐந்தாவது கட்டுரை முதல் பன்னிரண்டாவது கட்டுரை வரையில் பரிபாடலின் ஐந்தாம் பாட்டின் விளக்கம். திருஞானசம்பந்தப்பெருமான் முருக