பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ητ

னுடைய திருவவதாரம் என்பதற்கு கம்பியாண்டார் நம்பிகளின் திருவாக்கில் உள்ள ஒரு குறிப்பைப் பற்றிய கட்டுரை, எதுசரி? என்பது. - -

வடநாட்டு முருகன்’ என்பது நான் வடநாட்டு நகரங்களுக் குச் சென்ற போது அறிந்தவற்றைக் கொண்டு எழுதியது. திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பரிபாடலில் வரும் செய்திகளேத் தொகுத்துத் தருவது திருப்பரங்குன்றம்' என்ற கட்டுரை. பழனி மலேமீது முருகவேள் பழங்கால முதலே எழுந்தருளியிருக் கிருன் என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் கட்டுாை பழம் பழனி என்பது. -

கடைசியில் உள்ள ஐந்து கட்டுரைகளும் அருணகிரி நாதரு டைய திருவாக்கோடு தொடர்புடையவை. இருப்பவல் திருப் புகழ் என்ற தொடருக்கு இப்போது சிலர் கூறும்உரை பொருத்த மற்ற தென்பதைக் காட்டி, இன்னவாறு கொள்ளுதல் சிறப்பு என்று விளக்குவது இருப்பவல்’ என்னும் கட்டுரை. கந்தர் அலங்காரப் பாட்டு ஒன்றுக்குச் சிறுகதை உருவத்தில் தரும் விளக் கம் இரட்டை விலங்கு. நாகாசல வேலவன்’ என்ற அநுபூதித் தொடரைப் பற்றிய சிறிய ஆராய்ச்சி, அந்தத் தலைப்பைப் பெற்ற கட்டுரையாக உள்ளது. 'மணியும் துகிரும் என்பது ஒர் அநுபூதிப் பாட்டிற்கு இன்ன பாடம் இருந்தால் நல்லதென்பதைக் காட்டுவது. கல் உருகும் என்பது அநுபூதிப் பாடல் சிலவற் றைக் கொண்டு அமைத்த கட்டுரை. - - இந்த இருபத்தொரு கட்டுரைகளும் முருகனுடைய தொடர் புடையன ஆகையால் ஒன்ருகத் தொகுத்து வெளியிடப் பெறு கின்றன. ஆராய்ச்சி, விளக்கம், வருணனை, அநுபவம் என்று பலவகையில் இந்தக்கட்டுரைகள் அமைந்திருந்தாலும் முருகனைப் பற்றிய நினைவோடு தோன்றியவை. ஆதலின் படிப்பவர்களுக்கும் அந்த கினேவை உண்டாக்கும் என்றே எண்ணுகிறேன்.

5-12-52 கி.வா. ஜகந்நாதன்