பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - பெரும் பெயர் முருகன்

இசையும் கலந்த பாட்டு. நடுவிலே முடுகு வரும். அதற்கு இராகம் உண்டு; தாளம் உண்டு. மிகப் பழங்காலத்தில் அந்தச் செய்யுளில் பலவற்றைப் புலவர்கள் பாடி வந்தார்கள் என்று தெரிகிறது. தொல்காப்பியத்தில் அதற்கு இலக்கணம் இருக்கிறது. பிற்காலத்தில் உண் டான யாப்பிலக்கண நூல்களில் அதன் இலக்கணத்தை விட்டுவிட்டார்கள். வழக்கில் இல்லாத ஒன்றை எதற்குச். சொல்ல வேண்டுமென்று எண்ணியிருக்கலாம். யாப்பருங் கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரண்டு நூல் களும் செய்யுளிலக்கணத்தைச் சொல்லும் புத்தகங்களிற் சிறந்தவை. அவற்றில் பரிபாடலின் இலக்கணம் இல்லே. ஆனல் நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் இருந்த புலவர் ஒருவர் மாத்திரம் "பாப்பாவினம்’ என்ற தம் நூலில் அதன் இலக்கணத்தைச் சொல்லியிருக்கிரு.ர். -

பரிபாடலால் அமைந்த நூல்கள் முதல் இரண்டு சங்கங்களில் அதிகமாக வழங்கியிருக்க வேண்டும். வரவர அதில் குறைவாகவே பாடினர்கள் என்று தோன்றுகிறது. கடைச் சங்ககாலத்தில் பாடிய பரிபாடல்களேத் தொகுத்து, பரிபாடல் என்று பெயரிட்டுத் தமிழ்மக்கள் படித்து இன்புற்ருர்கள். கடைச்சங்க நூல் வரிசையில் ஒன்ருகிய எட்டுத் தொகையில் இந்தப் பரிபாடலும் ஒன்று. எழுபது பாட்டுக்களே உடையது இந்தத் தொகை நூல். அவற்றில் முருகவேளின் சிறப்பைச் சொல்லும் பாட்டுக்கள் முப்பத் தொன்று. - - o

அந்த நூலில் உள்ள எழுபது ப்ாடல்களில் இப்போது இருபத்திரண்டு பாடல்களே கிடைக்கின்றன. அவற்றைக் கண்டு பிடித்து நன்கு ஆராய்ந்து மிக அருமையான குறிப்புக்களுடன் என்னுடைய ஆசிரியப்பிரானகிய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்க்ள் வெளிப்படுத்தி யிருக்கிருர்கள். முருகக்கடவுளுக்குரிய பாடல்கள் எட்டு