பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுவன் இளவெயினனர் பாட்டு 33

அந்தப் புத்தகத்திலே இருக்கின்றன. கடுவன் இளவெயி னனர், ஆசிரியன் நல்லந்துவர்ை. குன்றம் பூதனர், கேசவனர், நல்லழிசியார், நப்பண்ணனர், நல்லச் சுதனர் என்ற புலவர்கள் அப்பாடல்களைப் பாடியிருக் கிரு.ர்கள். குன்றம் பூதனர் பாடிய இரண்டு பாடல்கள் gy .6iᎢ 6lᎢ ᏮüᎢᏍ. -

இப்போது உள்ள பரிபாடல் என்ற நூலில் கடுவன் இளவெயினனர் இயற்றிய பாடல் ஐந்தாவதாக அமைக் திருக்கின்றது. அவர் திருமாலைப்பற்றியும் இரண்டு பரிபாடல் இயற்றியிருக்கிருர். முருகனேப்பற்றி அவர் பாடிய பாட்டில் அப்பெருமானது திருவவதாரமும் பிற திருவிளையாடல்களும் வருகின்றன.

சூரனை முருகன் வென்ற திறத்தை அவர் பாடுகிரு.ர். சரவணப் பூம் பொய்கையில் விளையாடியிருந்த பொழுதே இந்திரைேடு பொருது அவன் செருக்கை அடக்கிய செய்தியைச் சொல்கிருர், மலேயடர்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தில் பூசாரி அவனே வழிபடும் வகையைத் தெரிவிக் கிரு.ர். முருகன் திருவவதாரக் கதையைப் பழைய சம்பிர தாயப்படி சொல்கிருர். முருகன் அவதரித்தபோதே தேவர்கள் அவனுடைய பெருவலியை உணர்ந்து வணங்கி வாகனமும் கொடியும் படைக்கலமும் தந்தனர் என்று கூறுகிருர். முருகன் திருக்கரங்களில் உள்ள ஆயுதங்களைப் புலப்படுத்துகிருர். 'உயிர்களைக் கொல்பவர்களும், சின முடையோரும், அறநெறியில் நடவாத புல்லரும், பழியுடை யோரும், ஒழுக்கம் தவறினவரும், மறு பிறப்பு இல்லை யென்று சாதிப்பாரும் உன் அருளேப் பெறமாட்டார்கள்’’ என்று சொல்கிரு.ர்.

இறுதியில் அவர் முருகப் பெருமானே வேண்டுகிருர். 'உன்னுடைய அருளேப் பெறுவாரே பெரியரென்பதை உணர்ந்தோம். ஆதலால் கின்பால் நாங்கள் கேட்பது

3 سفاقيGL |