பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவுணரை அழித்த வேல் 41

தின்னும் தொழிலேயே உடைய கொடியவர் அவர்கள். அவர்கள் தாம் வாழப் பிறரை மாய்த்தார்கள். அவர்கள் வாழ வாழப் பிற உயிர்கள் மாய்ந்து கொண்டே இருக்கும். பிற உயிர்கள் வாழ வேண்டுமானல் அவுணர்கள் மாய வேண்டும். இரு வகையினரும் வாழ்வதென்பது இய லாத காரியம். பனியும் வெயிலும், இருளும் ஒளியும் ஒன்ருக இருப்பது இயலுமா? ஆருயிர்களைக் காக்க எடுத்த அவதார மாகையால் முதலில் அவுனரை மாய்த்தான் முருகன். மருத்துவன் நோயாளியின் நோயை முதலில் நீக்குகிருன்; பிறகு நோயால் மெலிந்த உடம்பு வளம்பட நன் மருந்து தருகிருன். அப்படியே முருகன் ஆருயிரைக் கொன்று தின்னும் அவுணராகிய நோயை மாய்த்துப் பின் அருள் மருந்தை உதவலானுன். -

உயிர்களைக் கொன்று தின்னும் இயல்பு அசுர சுபாவம். மக்களுள் அவ்வியல்பு இருத்தல் அடாது. அரக்கரும் அவுனருமே அந்தத் தொழிலே உடையவர். r

தாடகையைச் சங்கரிக்கவேண்டும் என்று இராமபிரா னுக்கு அறிவுறுத்தினர் விசுவாமித்திரர். முனிவருடைய ஆசிரமத்தை நோக்கிப் போகும் போது இடையிலே புல்லும் மரமும் இன்றி வெறும் பாலேவனமாக இருந்த கிலப்பரப்பைக் கண்ட காகுத்தன், இந்த நிலம் இப்படி ஆனதற்குக் காரணம் யாது?’ என்று கேட்கிருன். 'தாடகை என்னும் அரக்கியால் இப்படி ஆயிற்று' என்று சொல்லவரும் முனிவர், அவ்வரக்கியின் இயல்பைச் சொல்கிரு.ர். . . . .

............இன்னுயிர் கொன்றுழல் வாழ்க்கையள்

என்று சொல்கிருர், தாடகை எதிர்ப்பட்டபோது அவளேக், கொல்லவேண்டுமென்று கூறுகிருர் அவள் பெண்ணு