பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரும் பெயர் முருகன்

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கித் தீஅழல் துவைப்பத் திரிய விட்டு எறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுனல் அஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய அவுனர் மருங்கு அறத் தபுத்தவேல்.

(பரவிய பெருங்கடலுள் பாறைகளெல்லாம் பொடியாகும் படியாகப் புகுந்து, மிக உயர்ந்த பிணிமுகம் என்னும் யானேயின் மேல் ஏறி வந்து யுத்தம் செய்து திக்கொழுந்து ஒலிக்கும்படியாகச் சுழலும்படி விட்டு எறிந்து, அச்சத்தை உடைய நடுங்கிய சூரணு கிய மாமரத்தின் அடியைப் பிளந்து, வெற்றியையுடைய மக்களுள் புண்ணியஜனம் பாவஜனம் என்ற இரண்டினுள் ஒன்ருகிய புண் னிய ஜனம் என்ற பெயரைப் பெற்றவரும், கொன்று உண்ணுத இக்கு அஞ்சாதவரும், கொடுவினயை உடையவரும், கொல்லு வதற்கு ஏற்றவரும் ஆகிய மாயம் மிக்க அவுணரைக் குலமுழு தும் அற்றுப்போகு படி அழித்த வேல்.-அந்த வேலையுடைய முருகக் கடவுள் என்று சொல்ல வருகிரு.ர். х உழக்கி-கலக்கி. அழல்-கொழுந்து. துவைப்ப ஒலிக்க. துடங்கு-நடுங்கும். முதல்-அடிமரம். தடித்து-வெட்டி. ஒருமை யொடு-ஒன் ருல். பெயரிய-பெயர்கொண்ட. கொஃறகை-கொல் தகை; கொல்லப்படும் தகுதிபெற்ற மருங்கு அற-குலம் முழுவ தம் ஒழிய தபுத்த-கொன்ற

வேலின் புகழைப் பாடவந்த புலவர் குரனே அது அழித்த சிறப்பை முதலில் பாடினர்; சூரனைச் சார்ந்த அவுனரை காசம் செய்த சிறப்பையும் சொன்னர்.

"அவுணரை மருங்கற மாய்க்குத் தொழில் கியாய மானதா? என்ற கேள்விக்கு விடை சொல்பவரைப்போல், அவர்கள் கொல்வதற்கு ஏற்றவர்கள் என்று குறிப்பிடு. கிருர், ஏன்? வாழ்வு முழுவதும் பிற உயிரைக் கொன்று.